இந்திய வங்கி மீதான நம்பிக்கையை இழக்கும் மக்கள்.. அடுத்தடுத்து வங்கிகளுக்குப் பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லட்சுமி விலாஸ் வங்கி மீது மத்திய நிதியமைச்சகம் moratorium கட்டுப்பாடுகள் விதித்து, அடுத்த ஒரு மாதத்திற்கு இவ்வங்கியில் டெப்பாசிட் செய்தவர்களுக்கு 25,000 ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்யக் கூடாது என அறிவித்து இவ்வங்கி வாடிக்கையாளர்களைப் பயமுறுத்தியது.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த ஒரு மணிநேரத்தில் ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியைக் காப்பாற்றும் வகையில் இவ்வங்கியை DBS வங்கியுடன் இணைக்கத் திட்ட வடிவத்தை வெளியிட்டு மக்களின் பயத்தைத் தணித்தது.

இந்திய வங்கிகள் சந்தித்து வரும் அடுத்தடுத்த பிரச்சனைகளால் இந்திய மக்கள் வங்கி அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்..!

லட்சுமி விலாஸ் வங்கியை DBS வங்கி உடன் இணைக்க ரிசர்வ் வங்கி திட்டம்..! #LVBலட்சுமி விலாஸ் வங்கியை DBS வங்கி உடன் இணைக்க ரிசர்வ் வங்கி திட்டம்..! #LVB

பணத்திற்குப் பாதுகாப்பான இடம்..

பணத்திற்குப் பாதுகாப்பான இடம்..

இந்திய மக்கள் கடந்த சில வருடங்களாகவே தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவோ, முதலீடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

வங்கிகள் அடுத்தடுத்த சரிவுகளையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில் பல கடன் திட்டங்கள் அதிகளவிலான சரிவைச் சந்தித்தது. மார்ச் 2020ல் சுமார் 6 கடன் திட்டங்கள் மீது தடை விதிக்கப்பட்டது. பங்குச்சந்தை பற்றிச் சொல்லவே தேவையில்லை.

அடை தலையணைக்கு அடியில் வைத்திருந்த பணம் கூடப் பணமதிப்பிழப்பில் மாயமானது.

 

லட்சுமி விலாஸ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கி

இந்த நிலையில் லட்சுமி விலாஸ் வங்கி மீதான moratorium கட்டுப்பாடுகள் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக 25,000 ரூபாய்க் கட்டுப்பாடுகள் சாமானிய மக்களை அதிகளவில் பாதித்துள்ளது.

சாமானிய மக்கள்

சாமானிய மக்கள்

குறிப்பாகத் திருமணத்திற்காக, குழந்தைகளின் படிப்பிற்காக மருத்துவச் செலவுக்காக இன்னும் இன்னும் பல அத்தியாவசிய தேவைகளுக்காகப் பணம் தேவைப்படுபவர்கள் தனது சொந்தப் பணத்தைக் கூட எடுக்க முடியாமல் என்ன செய்வார்கள்?? என்ற கேள்வி அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் இருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி அவசர தேவைகளுக்குப் பணத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி கொடுத்துள்ளது.

 மக்கள் பீதி அடைய வேண்டும்

மக்கள் பீதி அடைய வேண்டும்

மக்களின் நிலையை உணர்ந்த ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் தனது கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த ஒரு மணிநேரத்தில் DBS வங்கி உடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்கும் பரிந்துரையை அறிவித்தது.

இதனால் லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்த மக்களின் பணத்திற்கு எவ்விதமான ஆபத்தும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. மேலும் இந்தக் கட்டப்பாடுகள் அடுத்த ஒரு மாதம் வரையில் மட்டுமே.

 

ஏடிஎம்

ஏடிஎம்

மேலும் அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடத்தில் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் வேகமாகப் பணம் எடுக்க ஏடிஎம் விரைந்துள்ளனர். 25,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பதால், டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தையும் அதிகளவில் மக்கள் பயன்படுத்தியுள்ளது.

கூடுதல் கட்டுப்பாடுகள் வந்தால் இன்னும் சிக்கலாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்ட 25,000 ரூபாய் பணத்தை உடனே எடுக்க வேண்டும் என மக்கள் வேகமாக ஏடிஎம் விரைந்துள்ளனர்.

 

 தமிழ்நாடு

தமிழ்நாடு

லட்சுமி விலாஸ் வங்கி தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் வர்த்தகம் செய்தும் நிலையில் இவ்வங்கியின் மீதான அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் சற்றுக் கூடுதலான பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் இந்தியாவில் லட்சுமி விலாஸ் வங்கிக்கு அதிக வாடிக்கையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎம்சி வங்கி

பிஎம்சி வங்கி

லட்சுமி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் போல் 2019ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் மும்பை மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி லிமிடெட் (PMC) வங்கிக்குக் கட்டுப்பாட்டுக்குள் விதிக்கப்பட்டது. அந்த வங்கிக்கு 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அதன்பின் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

யெஸ் வங்கி

யெஸ் வங்கி

வாராக்கடன், நிதி நெருக்கடி பல்வேறு மோசடிகள் காரணமாக மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்ட யெஸ் பேங்க்-க்கும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இவ்வங்கியில் டெபாசிட் வைத்திருப்போர் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

 மக்கள் மனநிலை

மக்கள் மனநிலை

இப்படி அடுத்தடுத்த நாட்டின் முக்கிய வங்கிகளே பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் போது மக்களுக்கு எப்படி வங்கி மீது நம்பிக்கை இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

People may lost confidence in the banking system from LVB scenario

People may lost confidence in the banking system from LVB scenario
Story first published: Tuesday, November 17, 2020, 23:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X