இன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருடைய தவறு..? நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருடைய தவறு..? நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..!

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டரில் புதிய வருமான வரித் தளத்தில் பல குறைபாடுகள் இருப்பதை மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் தனது டிவிட்டரில் முக்கியமான ஒரு டிவிட்டை செய்துள்ளார்.

அனைவரும் எதிர்பார்த்து இருந்த ஈ-பைலிங் போர்ட்டல் 2.0 நேற்று இரவு 10.45 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வருமான வரித் தளத்தில் பல குறைகள் மற்றும் குறைபாடுகளும் உள்ளது பார்க்க முடிகிறது"

புதிய வருமான வரித் தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனமும், நந்தன் நீலகேனியும் வருமான வரி செலுத்துவோருக்கு அளிக்கப்படும் சேவை தரத்தில் குறைபாடு ஏற்படுத்தாது என நம்புகிறேன். வரி செலுத்துவோருக்கு எளிய சேவை அளிப்பதே முதன்மையாக இருக்க வேண்டும் எனத் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன்.

இதைத் தொடர்ந்து டிவிட்டர் மக்கள் சரமாரியாக டிவீட் செய்து வருகின்றனர். அதில் சில உங்களுக்காக.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 43-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..!நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 43-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..!

பாராட்டுகளும், குறைபாடுகளும்

பாராட்டுகளும், குறைபாடுகளும்

கிருஷ்ணா என்பவர் தனது டிவிட்டரில் பொதுவாகப் பாராட்டுகள் எடுத்துக்கொண்டு, குறைபாடுகள் வந்த உடனே வாடிக்கையாளரை (Client) குறைகூறுவது LMAO எனத் தெரிவித்துள்ளது. இவருடைய மற்றொரு டிவீட்டில் இதற்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தைக் குறிப்பிட்டது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்

GSTN மற்றும் MCA தளத்தில் குறைபாடு

GSTN மற்றும் MCA தளத்தில் குறைபாடு

சவ்ரின் ஷா என்பவர் இதேபோன்ற பிரச்சனை GSTN மற்றும் MCA தளத்திலும் உள்ளது. Taxation என்பது வர்த்தகத்தை எளிதாக நகர்த்துவது, மார்க்கெட்டிங் இல்லை. இவருடைய அடுத்த டிவீட்-ல் அரசு அதிகாரிகள் சொல்வதை வைத்தே மென்பொருள் நிறுவனங்கள் பணியாற்றுகிறது. அதனால் அரசு தரப்பு அதிகாரிகளும் இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

50 ரூபாய் அபராதம்

50 ரூபாய் அபராதம்

ஸ்ரீநிவாஸ் என்பவர், ஜிஎஸ்டி வரி வசூலில் தாமதமாக வரி செலுத்தினாலும் ஒரு நாளுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்படுமா..? என்று கேள்வி கேட்டுள்ளார்.

டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ்

டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ்

ஜிஎஸ்டி
ஆதார்
வருமான வரி

அனைத்து ஒப்பந்தங்களும் காங்கிரஸ் இன்போசிஸ் நிறுவனத்திற்குக் கொடுத்தது.

பாஸ்போர்ட் சேவை டிசிஎஸ் செய்தது. இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால் அளவீட்டில் டிசிஎஸ் செய்தது மிகவும் சிறியது.

 

நந்தன் நீலகேனி மீது குற்றச்சாட்டு

நந்தன் நீலகேனி மீது குற்றச்சாட்டு

நந்தன் நீலகேனியை ஏன் தொடர்ந்து டிஜிட்டல் சேவைகளுக்கு நம்ப வேண்டும். அடிப்படை கூடச் சரியாகச் செய்ய முடியாதவர்களிடம் ஏன் இந்தப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினர்.

ஏன் இன்போசிஸ்

ஏன் இன்போசிஸ்

ஜிஎஸ்டி-யில் மோசமான அனுபவத்தைப் பெற்றுள்ள நிலையில், ஏன் திரும்பவும் வருமான வரித் தளத்தைக் கட்டமைக்கும் பணி இன்போசிஸ் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டது. இன்போசிஸ்-ன் சேவை மிகவும் மோசம். வருமான வரி செலுத்துவோர் தான் கடைசியில் அவதிப்படுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

People reaction on Infosys on glitches in new efiling tax portal

People reaction on infosys on glitches in new efiling tax portal. Hope Infosys, Nandan Nilekani will not let down our taxpayers in the quality of service being provided says FM Nirmala Sitharaman.
Story first published: Tuesday, June 8, 2021, 16:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X