கடைசியில் நீங்களுமா.. பணிநீக்கத்தை அறிவித்த பெப்சி கோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உலகின் முன்னணி முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் உலகின் மிகப்பெரிய குளிர்பான மற்றும் ஸ்னாக்ஸ் தயாரிப்பு நிறுவனமான பெப்சி கோ நிறுவனமும் சேர்ந்துள்ளது.

 

இதுவரையில் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தான் அதிகளவிலான பணிநீக்கம் செய்த நிலையில் திடீரென உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

லேஸ், டிராப்பிகான ஜூஸ் எனப் பல முன்னணி உணவு மற்றும் பானங்களைத் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்யும் நிறுவனம் பல நூறு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

ரெசிஷன்

ரெசிஷன்

உலகம் முழுவதிலும் ரெசிஷன் வந்தாலும் உணவு பொருட்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து இருக்கும், ஆனால் பாக்கெட் மற்றும் காஸ்ட்லியான உணவு பொருட்கள் விற்பனை சரியும். இந்த நிலையில் தான் பெப்சி கோ ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

பெப்சி கோ

பெப்சி கோ

பெப்சி கோ இந்தப் பணிநீக்க நடவடிக்கையில் தனது வட அமெரிக்க வர்த்தகத்தில் ஸ்னாக்ஸ் மற்றும் குளிர்பான பிரிவில் பல நூறு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளது. இந்தப் பணிநீக்கத்தின் மூலம் நிறுவனத்தின் நிர்வாக அமைப்புச் சீராகும், அதேபோல் சிறப்பான முறையில் இயங்க வழிவகுக்கும் எனப் பெப்சிகோ நம்புகிறது.

பணிநீக்கம்
 

பணிநீக்கம்

மேலும் இந்தப் பணிநீக்கத்தில் சிகாகோ பகுதியில் இருக்கும் தலைமை அலுவலகத்திலும், நியூயார்க் வர்த்தகப் பகுதியின் கொள்முதல் பிரிவு, டெக்சாஸ் பகுதியில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என வால் ஸ்ட்ரீஸ் ஜர்னல் தெரிவித்துள்ளது.

ஸ்னாக்ஸ்

ஸ்னாக்ஸ்

பெப்சி கோ ஏற்கனவே தனது ஸ்னாக்ஸ் தயாரிப்பில் ஊழியர்களை வீஆர்எஸ் மூலம் அதிகளவில் நீக்கிய நிலையில் தற்போது குளிர்பான பிரிவில் ஊழியர்களை நீக்கியுள்ளது.

3,09,000 பேர்

3,09,000 பேர்

கடந்த கிறிஸ்துமஸ் வரை அதாவது டிசம்பர் 25 வரையில், பெப்சி நிறுவனம் உலகளவில் சுமார் 3,09,000 பேரை பணியில் அமர்த்தியுள்ளது. இதில் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் அமெரிக்கச் சந்தையில் பணியில் உள்ளனர் என இந்நிறுவனம் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பணிநீக்க அறிவிப்புகள்

பணிநீக்க அறிவிப்புகள்

ஐடி, டெக், டிஜிட்டல் சேவை நிறுவனங்களைத் தாண்டி அமெரிக்காவில் CNN, பெப்சி கோ பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது, National Public Radio, Warner Bros ஆகியவை புதிய ஊழியர்களைப் பணியில் சேர்ப்பதை நிறுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PepsiCo to layoff its employees in North American beverages division

PepsiCo to layoff its employees in North American beverages division
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X