31 ரூபாய் பெட்ரோல்-ஐ 89 ரூபாய்க்கு விற்பனை.. வரி மட்டும் 55 ரூபாய்.. பாவம் மக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் உற்பத்தி பொருட்களின் விலையில் முக்கியப் பங்கு வகிக்கும் போக்குவரத்து செலவுகளைத் தீர்மானிக்கும் பெட்ரோல், டீசல் விலை 8வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது.

 

பெட்ரோல், டீசல் விலை உயரும் காரணத்தால் வெங்காயம், தக்காளி முதல் பென்ஸ் கார் வரையில் அனைத்து உற்பத்தி மற்றும் தயாரிப்புகளின் விலையும் உயரும். இதேபோல் பல சேவைகளின் கட்டணம் மற்றும் விலை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நம்பியுள்ளது.

இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சர்வதேசச் சந்தையின் கச்சா எண்ணெய் நிலவரத்தின் படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 பைசாவும், டீசல் விலை 35 பைசாவும் உயர்ந்துள்ளது. இந்தத் தொடர் உயர்வால் மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

இன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 89.29 ரூபாயாகவும், டீசல் 79.70 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டாலும், ராஜஸ்தான் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் ஹைய் ஆக்டேன் கொண்ட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.34 ரூபாய் விலையை அடைந்துள்ளது. இதே பகுதியில் சாதாரணப் பெட்ரோல் விலை 99.56 ரூபாயாக உயர்ந்துள்ளது.

100 ரூபாயை தொடும் நிலை

100 ரூபாயை தொடும் நிலை

இதைத் தொடர்ந்து இந்தியாவில் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களுரூ, ஹைதராபாத், கொச்சி, நொய்டா ஆகிய பகுதிகளில் இன்று பெட்ரோல் 26 முதல 32 பைசா வரையிலும், டீசல் 30 முதல் 35 பைசா வரையிலும் உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

8 நாள் தொடர் உயர்வு
 

8 நாள் தொடர் உயர்வு

மேலும் இந்தியாவில் கடந்த 7 நாட்களில் பெட்ரோல் விலை 2.36 ரூபாயும், டீசல் விலை 2.91 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது. இன்று ஏற்பட்டுள்ள 26 பைசா முதல் 35 பைசா வரையிலான விலை உயர்வு மக்கள் கடுமையாகப் பாதித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். உண்மையில் ஒரு லிட்டருக்கு எவ்வளவு வரியை நாம் செலுத்துகிறோம்.

இந்தியன் ஆயில் கார்பரேஷன்

இந்தியன் ஆயில் கார்பரேஷன்

இந்தியன் ஆயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி வெளிநாட்டில் (ஓமன், பிரிட்டன், துபாய் ஆகிய நாடுகள்) இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்-ஐ சுத்திகரிப்புச் செய்து பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றி விற்பனை சந்தைக்கு வரும் போது ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 31.82 ரூபாய்.

போக்குவரத்துக் கட்டணம்

போக்குவரத்துக் கட்டணம்

இந்நிலையில் பெட்ரோலை ரீடைல் விற்பனையங்களில் கொண்டு சேர்க்கச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு 0.28 ரூபாய் அளவிலான தொகையை வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ரீடைல் தளத்தில் அதாவது பெட்ரோல் பங்குகளில் 32.10 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கப்படுகிறது.

மதிப்புக் கூட்டு வரி (VAT)

மதிப்புக் கூட்டு வரி (VAT)

இதன் மீது டீலர் கமிஷன் மூலம் லிட்டருக்கு 3.68 ரூபாய் பெட்ரோல் பங்குகள் வசூலிக்கப்படுகிறது, டீசல் கமிஷன் மீது மாநில அரசுகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வரி விதிக்கப்படும் நிலையில் டீலர் கமிஷன் வாயிலாக வாட் வரியின் மூலம் 20.61 ரூபாய் விதிக்கப்படுகிறது.

மத்திய அரசின் கலால் வரி

மத்திய அரசின் கலால் வரி

இதைத் தொடர்ந்து பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி மூலம் சுமார் 32.90 ரூபாய் வரியாக வசூலிக்கப்படுகிறது. பெட்ரோலின் அசல் விலையான 31.82 ரூபாய் விடவும் மத்திய அரசின் கலால் வரி அதிகமாகும். இதை மாநில அரசு விதிக்கும் வாட் வரிக்கு இணையாகக் குறைத்தால் கூட 10 ரூபாய் குறையும்.

53.51 ரூபாய் வரி

53.51 ரூபாய் வரி

இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை டெல்லியில் 89.29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஒவ்வொரு மாநிலம் மற்றும் பயணத் தூரத்திற்கு அடிப்படையில் விலை நிலை மாறுபடும் என்பதை மறந்து விடக்கூடாது.

ஆக 31.82 ரூபாய் மதிப்பிலான ஒரு லிட்டர் பெட்ரோல் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரியின் மூலம் சுமார் 53.51 ரூபாயை வரியாக மட்டுமே செலுத்தி வருகிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

petrol, diesel prices jump consecutive 8 days: Tax breakup details on petrol price

petrol, diesel prices jump consecutive 8 days: Tax breakup details on petrol price
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X