கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்தும் பெட்ரோல் விலை உயர்வு.. என்ன காரணம்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியா ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கு வாங்கும் போது கூட இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் மட்டுமே.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயரும் காரணத்தால் சாமானிய மக்கள் தினசரி வாழ்க்கை முறை பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் உயர்வுக்குக் காரணம் என்ன..? 110 டாலருக்குக் கச்சா எண்ணெய் வாங்கும் போது எப்படி இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவாக இருந்தது.

இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்

இந்தியாவில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 23 முதல் 26 பைசா வரையில் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 91.68 ரூபாயாகவும், டெல்லியில் 89.54 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 90.78 ரூபாயாகவும், மும்பையில் 96.00 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

100 தொட்ட உத்தரப் பிரதேசம்

100 தொட்ட உத்தரப் பிரதேசம்

சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் முதல் முறையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டிய நிலையில் இன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டும் போது மக்களுக்கு இந்தச் சுமை பழகிவிடும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

2013 சந்தை நிலவரம்

2013 சந்தை நிலவரம்

2013ல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 109 முதல் 111 டாலர் வரையில் விற்பனை செய்யப்பட்ட போது உலக நாடுகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையைப் பெருமளவில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்வதில் இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. 109 - 111 டாலர் விலை என்பது இந்தியா வாங்கிய கச்சா எண்ணெய் விலையின் நிலவரம்.

இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு

இதன் மூலம் 2013ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 54.77 ரூபாயில் இருந்து 55 ரூபாய் வரையில் இருந்தது. அதன் பின்பு அடுத்த 6 மாதத்தில் 55 ரூபாயில் இருந்து 63 வரையில் உயர்ந்தது. இதனால் கச்சா எண்ணெய் கொள்முதல் விலையிலும் பெரிய அளவிலான மாற்றம் இருந்தது.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை

ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை, டாலர் மதிப்பு ஆகியவற்றைச் சேர்ந்து 2013ஆம் ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை குறைந்தபட்சம் 5,380.42 ரூபாயும், அதிகப்படியாக 6,749.25 ரூபாயாகவும் இருந்தது. இதன் மூலம் பெட்ரோல் விலை சராசரியாக ஒரு லிட்டர் 76 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலை என்ன..?

பிபிஏசி அமைப்புத் தரவுகள்

பிபிஏசி அமைப்புத் தரவுகள்

இந்தத் தரவுகள் அனைத்தும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிபிஏசி அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் நிலவரம். பிப்ரவரி மாதத்தின் விலை நிலவரம் டிசம்பர் 30, 2020 முதல் ஜனவரி 17, 2021 வரையில் வாங்கிய கச்சா எண்ணெய் விலை அளவுகளின் படி நிர்ணயம் செய்யப்படுகிறது.

பிப்ரவரி மாத நிலவரம்

பிப்ரவரி மாத நிலவரம்

அந்த வகையில் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 54.41 டாலர், டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 73.13 டாலர், இதனால் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யில் விலை 3979 ரூபாய், இது 2013 அளவீட்டை ஒப்பிடுகையில் சுமார் 2000 ரூபாய் குறைவு, ஆயினும் பெட்ரோல் விலை நாடு முழுவதும் சராசரியாக 91 ரூபாயைத் தாண்டியுள்ளது. சில மாநிலங்களில் 100 ரூபாயைத் தாண்டியுள்ளது மறந்துவிடக் கூடாது.

அதீத வரி விதிப்பு

அதீத வரி விதிப்பு

2013ஆம் ஆண்டை தற்போது ஒப்பிடுகையில் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது, கச்சா எண்ணெய் குறைந்துள்ள போதிலும் இந்திய அரசு வாங்கும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்குச் சுமார் 2000 ரூபாய்க்கு மேலாகக் குறைந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு விதித்து வரும் கலால் வரி தான்.

வரி அளவீடுகள்

வரி அளவீடுகள்

மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அடிப்படை கலால் வரியாக 1.40 ரூபாயும், சிறப்புக் கூடுதல் வரியாக 11 ரூபாயும், புதிதாக அறிவிக்கப்பட்ட அக்ரி இன்பரா டெவலப்மெண்ட் செஸ் வாயிலாக 2.50 ரூபாயும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சாலை மற்றும் உள்கட்டமைப்புச் செஸ் வரியாக 18 ரூபாயும் வசூலிக்கிறது.

மத்திய மாநில அரசின் வரி

மத்திய மாநில அரசின் வரி

கிட்டத்தட்ட மத்திய அரசு மட்டும் சுமார் 34 ரூபாயை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரியாக வசூலிக்கிறது. இதைத் தாண்டி மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் காரணத்தால் கிட்டதட்ட 54 முதல் 55 ரூபாய் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மக்கள் செலுத்தி வருகின்றனர்.

110 , 115ஐ தொடும்.

110 , 115ஐ தொடும்.

இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை 2000 ரூபாய் குறைவாக இருக்கும் போதே நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கி இருக்கும் நிலையில், பழைய நிலவரத்தின் படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 6,7000 ரூபாய் அளவீட்டில் இருந்தால் பெட்ரோல் விலை 100ஐ கடந்து 110 , 115ஐ தொடும்.

இதைக் கிளிக் செய்யுங்கள்.இதைக் கிளிக் செய்யுங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol price about reach ₹100 but its not due to crude oil: Real Reason Behind it

Petrol price reaching ₹100 but its not due to crude oil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X