24 மாநிலங்களில் 70,000 பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று போராட்டம்: ரீடெயில் விற்பனை பாதிக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 70 ஆயிரம் பெட்ரோல் டீலர்கள் இன்று எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிபொருளை வாங்க மாட்டோம் என போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தபோதிலும் பெட்ரோலுக்கான கமிஷன் திருத்தம் செய்யப்படவில்லை என்றும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 31ஆம் தேதி அதாவது இன்று 24 மாநிலங்களில் உள்ள 70 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல் டீசலை வாங்குவதில்லை என முடிவு எடுத்துள்ளன.

இதுகுறித்து டெல்லி பெட்ரோல் டீலர்கள் சங்கத்தின் தலைவர் அனுராக் ஜெயின் அவர்கள் கூறியபோது 'இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் இரண்டு நாட்களுக்கு பெட்ரோல், டீசல் இருப்பு இருப்பதால், இந்த போராட்ட நடவடிக்கை காரணமாக நுகர்வோருக்கு சில்லறை விற்பனை பாதிக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

பெட்ரோல், டீசலை தொடர்ந்து மின் கட்டணத்திலும் கை வைக்கும் பாகிஸ்தான்.. இலங்கையை விட மோசமாகிடும்போல?பெட்ரோல், டீசலை தொடர்ந்து மின் கட்டணத்திலும் கை வைக்கும் பாகிஸ்தான்.. இலங்கையை விட மோசமாகிடும்போல?

எந்தெந்த மாநிலங்கள்

எந்தெந்த மாநிலங்கள்

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், பீகார், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் முழு அளவில் போராட்டம் நடத்தி வருவதாகவும், அதேபோல் மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, சிக்கிம். வடக்கு வங்க டீலர்கள் சங்கம் மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆகிய பகுதிகளில் உள்ள சில டீலர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி

டெல்லி

தலைநகர் டெல்லியில் சுமார் 400 பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இன்று வாங்கவில்லை என்றும் அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 6500 பெட்ரோல் நிலையங்களிலும் போராட்டம் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கமிஷன்கள் திருத்தப்பட வேண்டும் என ஒப்பந்தம் இருந்தாலும், கடந்த 2017ம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளாக எந்தவித திருத்தமும் செய்யப்படவில்லை என்றும், இதனால் பெட்ரோல் நிலையங்கள் வைத்திருப்பவர்கள் கூடுதல் கடன் மற்றும் வங்கி வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போராட்டம்

போராட்டம்

பெட்ரோல் ஆவியாதல் போன்ற இழப்புகள் அதிகரித்து வருவதாகவும், வங்கி கட்டணம், மின்கட்டணம், ஊழியர்களின் சம்பளம் ஆகியவை கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து விட்டதாகவும், ஆனால் கமிஷன் மட்டும் அதிகரிக்கவில்லை என்றும், தொடர்ச்சியாக நாங்கள் கோரிக்கை வைத்த நிலையிலும் எண்ணை நிறுவனங்கள் எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்யவில்லை என்றும், அதனால்தான் இந்த போராட்டம் நடத்துவதாகவும் பெட்ரோல் நிலைய சங்கங்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமிஷன்

கமிஷன்

கடந்த 2017ஆம் ஆண்டு பெட்ரோலுக்கான கமிஷன் லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டாலும், எண்ணெய் நிறுவனங்கள் உரிமக் கட்டணம் என்ற பெயரில் 40 பைசாவை வைத்திருக்கின்றன என்று கூறிய ஜெயின், தற்போது பெட்ரோல் நிலையங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2.90 மற்றும் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.1.85 கமிஷன் பெறுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol Pump Dealers across 24 States To Go for 'No Purchase' on Today

Petrol Pump Dealers across 24 States To Go for 'No Purchase' on Today |24 மாநிலங்களில் 70,000 பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று போராட்டம்: ரீடெயில் விற்பனை பாதிக்குமா?
Story first published: Tuesday, May 31, 2022, 16:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X