கொரோனா மாத்திரை: 89% பலன் அளிக்கும் பைசர்-ன் PAXLOVID..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகையே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கான வேக்சின் கண்டுபிடிப்பதில் முன்னோடியாக இருந்த பைசர் நிறுவனம் தற்போது, கொரோனா தொற்று மூலம் ஆப்பத்துக்கட்டத்தில் இருக்கும் நோயாளியின் உயிரை காக்கும் மாத்திரை வடிவிலான மாத்திரையைத் தயாரித்துள்ளது.

PAXLOVID என அழைக்கப்படும் இந்தக் கோவிட் தடுப்பு மாத்திரை 2/3 சோதனை கட்டத்தில் 89 சதவீதம் வரையில் பலன் அளிப்பதாக ஆய்வு முடிவுகளைக் கூறுகிறது. இறுதி சோதனை முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் வேளையில் கொரோனா தொற்றை முழுமையாகவும், வேகமாகவும் குணப்படுத்த முடியும்.

 பைசர் நிறுவனம்

பைசர் நிறுவனம்

பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் மருந்தான PAXLOVID-ஐ அதிக ஆபத்து கொண்ட நோயாளிகளுக்கு (EPIC-HR) பரிசோதனை செய்யப்பட்டத்தில் நோயாளிகள் மரணத்தில் இருந்தும் மற்றும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடிகிறது.

 89 சதவீதம் பலன்

89 சதவீதம் பலன்

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் மத்தியில் செய்யப்பட்ட இந்தச் சோதனையில் அதிகமானோர் குணமடைந்து மரணப் பிடியில் இருந்து தப்பித்தது மட்டும் அல்லாமல் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியம் குறைந்துள்ளது. இந்த இடைக்காலச் சோதனையில் 89 சதவீதம் பலன் அளித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

 PAXLOVID மாத்திரை

PAXLOVID மாத்திரை

பைசர் நிறுவனம் தயாரித்த PAXLOVID மருந்தை எடுத்துக்கொண்ட நோயாளிகளில் சுமார் 28 நாளில் வெறும் 0.8 சதவீதம் மக்கள் மட்டுமே மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அதாவது 389 நோயாளிகளில் 3 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், மேலும் 7 சதவீத நோயாளிகளுக்கு PAXLOVID மாத்திரையால் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை, அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தில் 7 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 ஆய்வு முடிவுகள்

ஆய்வு முடிவுகள்

இந்த ஆய்வின் முடிவுகள் சிறப்பாக இருக்கும் காரணத்தால் இந்த மருந்து சோதனையில் புதிதாக யாரையும் சேர்க்க வேண்டாம் என அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இறுதி ஒப்புதலுக்கான ஆய்வு அறிக்கையைப் போதுமான ஆவணங்கள் உடன் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது FDA அமைப்பு.

 மக்களுக்கு நன்மை

மக்களுக்கு நன்மை

பைசர் நிறுவனத்தின் PAXLOVID மருந்து ஒப்புதல் பெறும் பட்சத்தில் போதுமான வேக்சின் இல்லாத நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க முடியும். இதனால் பல கோடி உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

 வீட்டில் இருந்து சிகிச்சை

வீட்டில் இருந்து சிகிச்சை

மேலும் PAXLOVID மருந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்து சிகிச்சை பெற உதவும், மேலும் இது கொகோனா தொற்றால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும், அனைத்திற்கும் மேலாக கொரோனா-வால் உயிரிழக்கும் மக்களை அதிக எண்ணிக்கையில் காப்பாற்ற முடியும்.

 நம்பிக்கை, வலிமை

நம்பிக்கை, வலிமை

PAXLOVID வெறும் மருந்து மட்டும் அல்ல மக்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு செல்லும் நம்பிக்கை, இதுமட்டும் அல்லாமல் கொரோனா தொற்று அதிகரித்தாலும் மக்களைக் காப்பாற்ற முடியும் என வலிமையை உலக நாடுகளுக்குக் கொடுக்கக் கூடிய ஒன்று. இத்தகைய மருத்து உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தையும் மேம்படுத்தும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pfizer: PAXLOVID COVID-19 pill cuts hospitalization, death risk by 89% in interim analysis

Pfizer: PAXLOVID COVID-19 pill cuts hospitalization, death risk by 89% in interim analysis
Story first published: Saturday, November 6, 2021, 18:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X