போன்பே எடுத்த திடீர் முடிவு.. ZestMoney கைப்பற்ற பேச்சுவார்த்தை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் போன்பே நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லவும், விரிவாக்கம் செய்யவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 3 வருடமாக ரீடைல் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் Buy Now Pay Later சேவை ஈகாமர்ஸ் ஷாப்பிங் முக்கியமானதாக மாறியுள்ளது. இந்த Buy Now Pay Later சேவை மூலம் புதிதாக வாடிக்கையாளர்களை ஈர்பது மட்டும் அல்லாமல் தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்து அதிக வருவாய் ஈட்டவும் முடியும்.

இந்த நிலையில் இப்பிரிவில் இருக்கும் ZestMoney நிறுவனத்தை மொத்தமாக வாங்க போன்பே திட்டமிட்டு களமிறங்கியுள்ளது.

அமெரிக்காவின் கோபத்திற்கு உள்ளாகும் இந்தியா.. பாதிப்பு என்ன? அமெரிக்காவின் கோபத்திற்கு உள்ளாகும் இந்தியா.. பாதிப்பு என்ன?

போன்பே

போன்பே

போன்பே நிறுவனம் தனது நிதி சேவையைப் பெரிய அளவில் மேம்படுத்தும் நோக்கத்துடன் ZestMoney என்னும் Buy Now Pay Later சேவை வழங்கும் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற உள்ளது. ZestMoney சமீப காலமாகத் தனது வர்த்தகத்தை விற்பனை செய்துவிட்டு புதிய நிதியைத் திரட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.

ZestMoney

ZestMoney

ZestMoney இந்த முயற்சியில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் புதிய முதலீடுகளை டெக் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டவும் முடியாமல் தவிக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டியை உயர்த்தியதன் மூலம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய முதலீட்டைப் பெற முடியாமல் தவித்து வருகிறது.

முக்கியக் கட்டம்

முக்கியக் கட்டம்

இந்த நிலையில் தற்போது போன்பே நிறுவனம் கைப்பற்றல் பேச்சுவார்த்தையைத் துவங்கி முக்கியக் கட்டத்தை அடைந்துள்ளது, ZestMoney-க்கு ஜாக்பாட் ஆகப் பார்க்கப்படுகிறது . இதனால் ZestMoney மற்றும் போன்பே மத்தியிலான டீல் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் நியூ ஏஜ் லென்டிங் பிரிவில் மிகப்பெரிய M&A திட்டமாக இது இருக்கும்.

Buy Now Pay Later சேவை

Buy Now Pay Later சேவை

இதேவேளையில் Buy Now Pay Later சேவைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தீவிரமாகக் கண்காணிப்பது மட்டும் அல்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள காரணத்தால் இப்பிரிவு வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் போன்பே ZestMoney நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது.

ZestMoney - போன்பே டீல்

ZestMoney - போன்பே டீல்

ZestMoney - போன்பே நிறுவனத்தின் மதிப்பீட்டைக் கணிக்க முடியாவிட்டாலும் இதை distress sale ஆகத் தான் பலரும் கூறிவருகின்றனர். இதனால் ZestMoney கடந்த முறை முதலீட்டை ஈர்த்த போது 400 மில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டது. தற்போது இதைவிடவும் குறைவான விலைக்குத் தான் போன்பே வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

ZestMoney - போன்பே டீல் குறியீடு ZestMoney செய்தி தொடர்பாளர் கூறுகையில் இது யூகத்தின் அடிப்படையிலான செய்து எனக் கூறியுள்ளார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அறிந்தவர்கள் விலை மற்றும் மதிப்பீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அடுத்த சில வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PhonePe may acquire ZestMoney; buy-now pay-later (BNPL) RBI new rules affecting business

PhonePe may acquire ZestMoney; buy-now pay-later (BNPL) RBI new rules affecting business
Story first published: Friday, November 25, 2022, 18:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X