ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனால் ஒவ்வொரு மாதம் ஒன்றாம் தேதி வரும் போது இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே.
ஆகஸ்டு 1ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டாலும் வீடுகளுக்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டரின் விலை குறைக்கப்படவில்லை என்பது இல்லத்தரசிகளுக்கு அதிருப்தியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் குழாய்கள் மூலம் அனுப்பப்படும் சமையல் கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் தகவல் அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் குழாய்கள் மூலம் சமையல் கேஸ் அனுப்பப்படும் வசதி தமிழ்நாட்டில் இல்லை என்பதால் தமிழக இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
குழாய் சமையல் எரிவாயு
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் போராடி வரும் இந்த நேரத்தில் தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய நகரங்களில் உள்ள வீட்டு சமையலறைகளுக்கு குழாய் மூலம் அனுப்பப்படும் சமையல் எரிவாயுவின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.63 உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குழாய் மூலம் சமையல் எரிவாயு விலை
டெல்லியில் குழாய் மூலம் சமையல் எரிவாயுவின் விலையானது, ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டருக்கு ரூ. 47.96 ஆக இருந்தத். இந்த நிலையில் இந்த விலை ரூ.50.59 என தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திரபரஸ்தா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள வீடுகளுக்கு சிஎன்ஜி மற்றும் குழாய் மூலம் சமையல் எரிவாயுவை விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும்.
விலை உயர்வு
டெல்லியில் குழாய் மூலம் சமையல் எரிவாயுவின் விலையானது, ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டருக்கு ரூ.50.59 ஆக இருக்கும். இது முன்பு ரூ. 47.96 ஆக இருந்தது என்று இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது - கார்களுக்கு சிஎன்ஜி மற்றும் தேசிய தலைநகர் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு சில்லறை விற்பனை செய்யும் நிறுவனம்.
விளக்கம்
இதுகுறித்து IGL விளக்கமளித்தபோது, 'அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யவும், இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த எல்என்ஜியை பயன்படுத்த அரசு கட்டாயப்படுத்தியதால் இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இரண்டு வாரங்களில் இரண்டாவது உயர்வு
இரண்டு வாரங்களுக்குள் இது இரண்டாவது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஜூலை 26-ம் தேதி யூனிட்டுக்கு ரூ.2.10 விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ.2.63 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய விலை
டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் PNG ஒரு க்யூபிக் மீட்டருக்கு ரூ.50.46 ஆகவும், குருகிராமில் ரு.48.79 ஆகவும் இருக்கும் என்றும் உள்ளூர் வரிகளை பொறுத்து விலையில் சில மாற்றங்கள் இருக்கும் என்று IGL தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications