வெற்றிகரமாக DHFL-ஐ கையகப்படுத்திய பிரமல் குழு.. ரூ.38,000 கோடிக்கு மேல் முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல்வேறு சவால்களுக்கும், போட்டிகளுக்கும் மத்தியில் பிரமல் குழுமம், திவான் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தினை 38,050 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியுள்ளது.

 

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேற்கண்ட 38,050 கோடி ரூபாயில், 34,250 கோடி ரூபாய் பணம் மற்றும் மாற்றமுடியாத கடன் பத்திரங்கள் என்றும், 3,800 கோடி ரூபாய் கடனாளிகளின் உரிமையாகவும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

திவான் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து அறிந்த ஒன்று தான். ஏனெனில் நிஜத்தில் இல்லாதவர்களுக்கு கற்பனையான கடன் கணக்குகள் மூலம் பல ஆயிரம் கோடு முறைகேடு உள்ளிட்ட பல மோசடி சம்பவங்களும் கண்டறியப்பட்டன. இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தான் இந்த நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது.

யாரிந்த பிரமல் குழுமம்

யாரிந்த பிரமல் குழுமம்

இப்படி பல மோசடி சம்பவங்களுக்கும் மத்தியில் தான், பிரமல் குழுமம் நிறுவனம், டி.ஹெச்.எஃப்.எல்லை கைப்பற்றியுள்ளது. மும்பையை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த கூட்டு நிறுவனமான இது, நிதி சேவைகள், பார்மா, ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு வணிகங்களைக் கொண்டுள்ளது.

கையகப்படுத்தல் மதிப்பு

கையகப்படுத்தல் மதிப்பு

இது குறித்து பிரமல் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திவான் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தினை 38,050 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் 34,250 கோடி ரூபாய் பணம் மற்றும் மாற்றமுடியாத கடன் பத்திரங்கள் என்றும், 3,800 கோடி ரூபாய் கடனாளிகளின் உரிமையாகவும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

பிரமல் குழுமத்திற்கு ஒப்புதல்
 

பிரமல் குழுமத்திற்கு ஒப்புதல்

இது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் டி.ஹெ.எஃப்.எல்லின் 94% கடன் வழங்குனர்கள் பிரமல் குழுமத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும், அதன் பிறகே இந்த கையப்படுத்தல் முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக ரிசர்வ் வங்கி மற்றும் CCI, NCLT உள்ளிட்டவற்றின் ஒப்புதல்களையும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இரு நிறுவனங்கள் இணைப்பு

இரு நிறுவனங்கள் இணைப்பு

பிரமல் கேப்பிட்டல் அண்ட் ஹவுசிங் பைனான்ஸ் (PCHFL) மற்றும் டி.ஹெச்.எஃப்.எல் (DHFL) நிறுவனத்தினையும் இணைக்கும் என்றும், இது PCHFL என்ற பெயரில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனம் என்றும் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் மீது கவனம்

வாடிக்கையாளர்களின் மீது கவனம்

தற்போது PCHFL நிறுவனத்தில் 24க்கும் அதிகமான மாநிலங்களில், 301 கிளைகள் உள்ளதாகவும், இதில் 2,338 ஊழியர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த குழுமவது வாடிக்கையாளர்களுக்கு உதவும் விதமாக 1 மில்லியனுக்கும் அதிகமான அதன் வாழ் நாள் வாடிக்கையாளர்களை அணுகும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Piramal group acquires DHFL for Rs.38,000 crore

Piramal group latest updates.. Piramal group acquires DHFL for Rs.38,000 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X