ஜீரோ வட்டியில் வீட்டுக் கடன்.. வீடு வாங்க இது சூப்பர் ஆஃபர் தான்.. விவரம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: எல்லோருடைய வாழ்விலும் வீடு என்ற கனவு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். உண்மையில் அவரவர் தகுதிகேற்ப மாட மாளிகையோ அல்லது குடிசையோ, எதுவாக இருந்தாலும் அவரவர் தகுதிகேற்ப ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது தான் பலரின் கனவும்.

 

அப்படி வீடு வாங்குவோர் அனைவரும் கையில் பணத்தினை வைத்துக் கொண்டு வாங்குவதில்லை. பெரும்பாலானோர் வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் வீட்டுக்கடன் வாங்கித் தான் அந்த கனவை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இப்படி கடன் வாங்கினாலும் பரவாயில்லை. அது குறைவான வட்டியாக இருந்தால் பரவாயில்லை என்றும் எண்ணப்படுகிறது.

7 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 47 % வீழ்ச்சியடையலாம்.. சென்னையில் எப்படி?

சூப்பர் சலுகை

சூப்பர் சலுகை

அப்படியானவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் விதமாக பிராமல் குழுமத்தினை சேர்ந்த பிராமல் ரியால்டி, என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு சூப்பர் சலுகை அறிவித்துள்ளது. அதாவது வீட்டுக்கடனுக்கு பூஜ்ஜிய வட்டி விகிதத்தினை அறிவித்துள்ளது. இது வீடு வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. உண்மையில் இது வீடு வாங்குவோருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு தான்.

வட்டி இல்லை

வட்டி இல்லை

தற்போதைய இந்த திட்டத்தின் கீழ், நுகர்வோர் மார்ச் 2022 வரை எந்தவித வட்டியும் இல்லாமல், எந்த சுமையும் இல்லாமல் தங்கள் கனவு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். ஆக இந்த தனித்துவமான சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொண்டு பயனடையலாம் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

எந்தெந்த திட்டம்
 

எந்தெந்த திட்டம்

இந்த பூஜ்ஜிய வட்டி விகித திட்டத்தில் பிரமல் மஹாலஷ்மி, பிரமல் ஆரண்யா மற்றும் பிரமல் ரேவந்தா ஆகிய இடங்களில் உள்ள வீடுகளை நுகர்வோர் தேர்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் இந்த ரியால்டி நிறுவனம் அறிவித்துள்ளது. இது போன்ற பல சலுகைகள் வட்டி விகிதம் குறைவு, ரியால்டி நிறுவனங்களின் சலுகைகளால், கடந்த ஆண்டை காட்டிலும் குடியிருப்பு வீடு விற்பனை வளர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் 67% வளர்ச்சி கண்டுள்ளது.

ஜீரோ வட்டி என்றால் மிச்சம்

ஜீரோ வட்டி என்றால் மிச்சம்

இது தவிர முத்திரை வரி குறைப்பு மற்றும் தீபாவளி பண்டிகை காலம் ஆகியவற்றால் விற்பனை களைகட்டியது. நாட்டில் வீடு வாங்குவதில் உரிமையாளர்களுக்கு உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று நிதி. அந்த நிதி வட்டி விகிதம் அதிகம் என்பதாலேயே, நீங்கள் பல லட்சங்களை இழக்க வேண்டியிருக்கும். ஆனால் ஜீரோ வட்டி விகிதம் என்றால் அது மிச்சம் தானே.

இது சரியான தருணம்

இது சரியான தருணம்

ஆக இது நிச்சயம் வீடு வாங்க சரியான தருணம் தான். மேலும் இந்த திட்டமானது என்ஆர்ஐ-க்களையும் ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று பிராமல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், பிராமல் குழுமத்தின் ரியல் எஸ்டேட் சம்பந்தமான நிறுவனமாகும். இந்தியாவின் முன்னணி டெவலப்பர்களில் ஒருவராகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Piramal realty offers home loan 0% interest rate some projects

Home loan offers update.. Piramal realty offers home loan 0% interest rate some projects
Story first published: Monday, December 21, 2020, 22:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X