PM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி! மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர்! வரிச் சலுகை உண்டு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸை எதிர்த்து பல நாட்டு அரசாங்கங்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அமெரிக்கா வரலாறு காணாத வகையில் சுமாராக 150 லட்சம் கோடி ரூபாய்க்கு உதவித் திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்கள்.

இந்தியா 1.70 லட்சம் கோடிக்கு உதவித் திட்டங்களை அறிவித்து இருக்கிறது. இது போக, பிரதமர் இன்று மார்ச் 28, 2020 சனிக்கிழமை ஒரு புதிய நிதித் திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.

PM-CARES Fund

PM-CARES Fund

Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund தான் இந்த நிதித் திட்டத்தின் முழு பெயர். இது ஒரு அவசர கால நிதித் திட்டம். இந்த திட்டத்தின் வழியாக திரட்டப்படும் பணம், கொரோனா வைரஸ் போன்ற அவசர காலத்தில், பாதிக்கப்படுபவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்த இருக்கிறார்களாம். இது பலமான இந்தியாவை உருவாக்க உதவும் எனச் சொல்லி இருக்கிறார் பிரதமர்

நன்கொடை

நன்கொடை

அதோடு, இந்திய நாட்டு மக்களை இந்த PM-CARES Fund திட்டத்துக்கு நன்கொடை செலுத்துமாறும் வேண்டு கோள் வைத்து இருக்கிறார். இந்த நிதித் திட்டம் மிகச் சிறிய தொகைகளைக் கூட பெற்றுக் கொள்ளும். இந்த நிதித் திட்டம் வருங்காலத்தில் பேரழிவு மேலாண்மையை வலுப்படுத்த உதவும், குடிமக்களை பாதுகாக்க தேவையான ஆராய்ச்சிகளைச் செய்ய ஊக்குவிக்கும் எனச் சொல்லி இருக்கிறார் பிரதமர்.

எப்படி பணம் செலுத்தலாம்

எப்படி பணம் செலுத்தலாம்

pmindia.gov.in என்கிற வலைதளத்துக்குச் சென்று, கீழே கொடுத்து இருக்கும் விவரங்களை வைத்து பணம் செலுத்தலாம்.
Name of the Account: PM CARES
Account Number: 2121PM20202
IFSC Code: SBIN0000691
SWIFT Code: SBININBB104
Name of Bank & Branch : State Bank of India, New Delhi Main Branch
UPI ID: pmcares@sbi

வழிமுறைகள்

வழிமுறைகள்

1. டெபிட் கார்ட் அல்லது ஏடிஎம் கார்ட்
2. க்ரெடிட் கார்ட்
3. இணைய வங்கி
4. யூ பி ஐ (பிம், போன் பே, அமேசான் பே, கூகுள் பே, பேடிஎம், மொபிக்விக்...)
5. ஆர் டி ஜி எஸ் (RTGS)
6. நெஃப்ட் (NEFT) போன்ற வழிகளில் பணம் செலுத்தலாமாம்.

80G சலுகை

80G சலுகை

பொதுவாக பிரதமர், முதல்வர், ராணுவம் போன்ற அரசு நிதித் திட்டங்களுக்கு பணத்தை நன்கொடையாகக் செலுத்தினால் வருமான வரிச் சட்டம் 80G-யின் கீழ் ஒரு குறிப்பிட்ட பகுதியோ அல்லது 100 % நன்கொடை தொகைக்கோ வருமான வரிச் சலுகை பெறலாம். அப்படி இந்த திட்டத்துக்கு 80G சலுகை உண்டு எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எத்தனை சதவிகிதம் என்று தெளிவாகச் சொல்லவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM-CARES Fund set up by PM asking donation from people also 80G available

The Prime minister narendra modi set up the PM-CARES Fund to deal with any kind of emergency or distress situation. Now asking people to donate in this fund. This fund has 80G exemption also.The Prime minister narendra modi set up the PM-CARES Fund to deal with any kind of emergency or distress situation. Now asking people to donate in this fund. This fund has 80G exemption also.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X