Budget 2021.. பட்ஜெட்டில் விவசாயிகளுக்களுக்கான பிஎம் கிசான் திட்டத்தில் சலுகைகள் அதிகரிக்கப்படலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதான் மந்திரி கிசான் திட்டம் பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக ரூ.6000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

 

கடந்த 2018ல் இருந்து இந்த திட்டத்தினை மத்திய அரசு வழங்கி வருகின்றது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விரைந்து நிதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவி வரும் பரப்பரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏதேனும் சலுகைகள் இருக்குமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

பிஎம் கிசான் திட்டம்

பிஎம் கிசான் திட்டம்

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய திட்டமாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana ) அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நேரடியாக மூன்று தவணையாக தலா ரூ. 2000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

இதுவரை எவ்வளவு?

இதுவரை எவ்வளவு?

சொல்லப்போனால் கடந்த 2019ல் 53,620 விவசாயிகளுக்கு 1,241 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதே 2020ம் நிதியாண்டில் 1,09,750 விவசாயிகளுக்கு 54,370 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதே 2021ம் நிதியாண்டில் இதுவரை 1,42,792 பேருக்கு 75,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தரவின் மூலம் அறிய முடிகிறது.

விவசாய துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யலாம்?
 

விவசாய துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யலாம்?

குறிப்பாக இந்த பட்ஜெட்டில் விவசாய துறைக்கு அதிகளவில் ஒதுக்கீடு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிஎம் கிசான் திட்டத்தில் இருந்து, நேரடியாக விவசாய மக்களுக்கு சலுகைகளை சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், இந்த பட்ஜெட்டில் சலுகைகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு

கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு

கடந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில், வேளாண்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. குறிப்பாக வேளாண் துறைக்கு மட்டும் 1.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டத்து. அதோடு விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு 16 அம்ச திட்டத்தினை நிதியமைச்சர் அறிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM kisan yojana amount may increase likely in coming budget

Budget 2021 expectations.. PM kisan yojana amount may increase likely in coming budget
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X