உலக அளவில் பேர் போன பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் நீரவ் மோடியின் வழக்கின், இறுதி விசாரணை ஜனவரி 7 - 8 அன்று இறுதி வாதம் நடக்கவுள்ளது.
குஜராத்தினை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடனை பெற்ற விட்டு, இந்தியாவில் இருந்து லண்டனுக்கு தப்பி ஓடிய மோசடி மன்னன் ஆவர், அதன் பிறகு லண்டனில் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்தரவாத கடிதங்களை வங்கி ஊழியர்கள் உதவியுடன் மோசடியாக பெற்ற வைர வியாபாரியான நிரவ் மோடி, 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் உள்ள வங்கி கிளைகளில் தனது நிறுவனத்திற்காக சுமார் 13,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

லண்டனுக்கு தப்பி ஓட்டம்
இந்த நிலையில் மோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை மேற்கொண்டது. இதனையறிந்தவர் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். இதன் பின்னர் லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிரவ்மோடிக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

லண்டனில் கைது
ஆரம்பத்தில் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு பின், பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, லண்டனில் காவல்துறையினர் நிரவ்மோடியை கைது செய்தனர்.

நாடு கடத்த திட்டம்
கிட்டதட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மற்றும் பணமோசடி செய்ததாக கூறி வரும் நிலையில், அவரது ஜாமீன் மனு பல முறை மறுக்கப்பட்டது. இதற்கிடையே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து அமலாக்கத் துறை மேற்கொண்டு வருகிறது.

விரைவில் தீர்ப்பு
சிறையில் உள்ள நிரவ் மோடி, 28 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வரப்படும் நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து இந்த வழக்கு குறித்த தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.