ஊழல் புகழ் நிரவ் மோடியின் ரிதம் ஹவுஸ் ஏலமா..ஊழல் பேர்வழிகளுக்கு சரியான சாட்டையடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிரவ் மோடி, விஜய் மல்லையா. மொகுல் சொக்சி இந்த பெயர்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. மோசடி செய்து வங்கிகளில் கடனை வாங்கி விட்டு, கடனை திரும்ப செலுத்தாமல், சொல்லாமல் கொள்ளமால் வெளி நாடுகளுக்கு தப்பி சென்ற ஊழல் பேர்வழிகள் தான் இவர்கள்.

 

இப்படி ஊழல் பேர்வழிகளுக்கு சரியான பாடம் புகட்ட அரசும் பல்வேறு விதமான நடவடிக்களை எடுத்து வருகின்றது. இவர்களின் சொத்துகளை கைபற்றி, அவற்றை விற்பனை செய்து அதன் மூலம் கடனை வங்கிகள் வசூலித்து வருகின்றன.

இது அடுத்து வரும் தலைமுறையினருக்கு சிறந்த பாடமாகவும் இருக்கும். இப்படிப்பட்ட ஊழல்வாதிகளில் ஒருவர் தான் வைர வியாபரியான நிரவ் மோடி.

இந்தியாவில் ஐபிஓ வெளியிட திட்டமிடும் ஹாங்காங் நிறுவனம்.. மோடி அரசு அனுமதி அளிக்குமா..?!

ரூ.13,000 கோடி கடன்

ரூ.13,000 கோடி கடன்

குஜராத்தினை சேர்ந்த வரை வியாபாரியான நிரவ் மோடி பல்லாயிரம் கோடி கடனை வாங்கிவிட்டு வெளி நாடுகளுக்கு தப்பி சென்றது தெரிந்த ஒரு விஷயம் தான். எனினும் இவரின் சொத்துகளை கைபற்றி கொடுத்த கடனை வங்கிகள் வசூலித்து வருகின்றன. குறிப்பாக இவருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டும் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்றதாக அப்போது கூறப்பட்டது.

சொத்துகள் பறிமுதல்

சொத்துகள் பறிமுதல்

சொல்லாமல் கொள்ளமல் லண்டனுக்கு தப்பி சென்ற இவரை, பின்னர் அங்கு வைத்தே கைதும் செய்யப்பட்டார். இதன் பிறகு இவருக்கு சொந்தமாக பல சொத்துகள் முடக்கப்பட்டன. இதில் ரியல் எஸ்டேட் சொத்துகள் பல சொகுசு கார்கள், பல கோடி மதிப்பிலான விலையுயர்ந்த ஓவியங்கள் என பலவும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

விரைவில் ஏலம்
 

விரைவில் ஏலம்

எனினும் முழுமையான கடன் தொகை இன்னும் கட்டிமுடிக்கப்படாத நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான மும்பையில் உள்ள பிரபலமான ரிதம் ஹவுஸ் விரைவில் அமலாக்க துறையினரால் ஏலத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிஸ்டில் இன்னும் பல சொத்துகள் அடையாளம்

லிஸ்டில் இன்னும் பல சொத்துகள் அடையாளம்

அமலாக்க இயக்குனரகம் இந்த ரிதம் ஹவுஸ் மட்டும் அல்ல, இன்னும் 30 சொத்துக்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், இதில் சூரத்தில் உள்ள சில தொழிற்சாலைகள், மும்பையின் சில இடங்களில் உள்ள அபார்ட்மெண்ட்டுகள், நிறுவனங்களில் உள்ள இருப்புகள் என பலவும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவைகள் நிரவ் மோடி மற்றும் அவரது மனைவி பேரிலும் இருப்பதாகவும் அமலாக்க இயக்குனரகம் கண்டறிந்துள்ளதாக எக்னாமிக் டைம்ஸ்-ல் வெளியான செய்தியொன்று கூறுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PNB scam: nirav modi's Rhythm house may auctioned soon

nirav modi's Rhythm house may auctioned soon; check details/ஊழல் புகழ் நிரவ் மோடியின் ரிதம் ஹவுஸ் ஏலமா..ஊழல் பேர்வழிகளுக்கு சரியான சாட்டையடி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X