இந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதிப்பீட்டு நிறுவனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில், வணிகங்கள் போராடுவதால், பொருளாதாரத்தினை எப்படி பாதுகாப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவிற்கு நெருக்கடிக்கு பின்பு, நாங்கள் விரைவில் நிதிப் பொறுப்புக்கு திரும்புவோம் என்று, உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களையும் நம்ப வைப்பதும் முக்கியம். மேலும் அரசாங்கம் இதனை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

 இந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மார்ச் மாத இறுதியில் இருந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டது. எனினும் ஜூன் மாதத்தில் இருந்து கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. இது பொருளாதார மீட்சிக்கான நம்பிகையை தூண்டியுள்ளது.

ஏழை மற்றும் சிறு குறு நடுத்த நிறுவனங்களுக்கு உதவ அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஆனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மூலம் உண்மையான பண வெளியேற்றம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தில் வெறும் 1% என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் மூடிஸ் நிறுவன இந்தியாவின் மதிப்பீட்டையும் கண்ணோட்டத்தினையும் குறைத்தது. இதற்கு பல காரணங்கள் உண்டு, இதனைத் தொடர்ந்தே ஃபிட்ச் நிறுவனமும் அதன் பார்வையை மாற்றியது.

மத்திய வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தினை கடந்த ஆண்டு 135 அடிப்படை புள்ளிகளுக்கு மேல் வட்டியை குறைத்தது. இதே நடப்பு ஆண்டில் முக்கிய 115 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. ஆனால் பணவீக்க அழுத்தங்கள் அதிகரித்துள்ளதால், எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக முந்தைய விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் பிந்தைய கூட்டங்களில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் நிச்சயமாக ஒத்துழைத்து வருகின்றன. ஆனால் அது வேறு எங்கும் இருப்பது போல் தெரிகிறது. ஆனால் இன்னும் பலவற்றை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தின் அழுத்தமான பகுதிகளை கடன் அடைகிறதா என்பதையும், சாத்தியமான நிறுவனங்கள் கடனை அணுக முடிகிறதா எனப்தையும், அல்லது சாத்தியமற்றவை என்பதையும் அறிய ரிசர்வ் வங்கி கவனம் செலுத்த வேண்டும் என்றும் ராஜன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அதன் கவனத்தை மையப்படுத்த வேண்டியது இங்கு தான் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இங்குள்ள வளங்கள் உங்களுக்கு நன்கு தெரியும். இன்று இந்தியாவில் குறைவாகவே உள்ளன.

மேலும் நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குனர்கள் மீதான கடன் நெருக்கடியினைக் குறைக்க, ரிசர்வ் வங்கி வியாழக்கிழமையன்று பெரு நிறுவன கடன் களை மறுசீரமைக்க அனுமதிக்கும் என்றும் கூறியது. இது தொழில் துறையால் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.

அரசாங்க அதிகாரிகளும் நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் நிதி ஊக்கம் அளிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறுகின்றனர். இது கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்தபோது வரலாம் என்றும் கூறியுள்ளனர் என்றும் ராஜன் கூறியுள்ளார். இந்த நேரத்தில் இந்தியா செய்ய வேண்டியது அத பொருளாதார திறன்களை பாதுகாக்க வேண்டியது தான் என்று கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Policymakers should focus on protecting the indian economy, said Raghuram Rajan

Former RBI’s governor Raghuram Rajan said Policymakers should focus on protecting the indian economy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X