வெறும் 50 ரூபாய் முதலீட்டில் ரூ.35 லட்சம் கிடைக்கும்.. டக்கரான போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய சந்தையில் தற்போது ஏகப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள் வந்தாலும் எப்போதும் மவுசு குறையாதது வங்கி வைப்பு நிதியும், போஸ்ட் ஆபீஸ் முதலீட்டுத் திட்டங்கள் தான், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்ற சிறப்பான திட்டம் மட்டும் அல்லாமல் 100 சதவீதம் பாதுகாப்பான திட்டம் என்பதால் நடுத்தர மக்கள் மத்தியில் எப்போதும் போஸ்ட் ஆபீஸ் முதலீட்டுத் திட்டத்திற்கு நல்ல மரியாதையும், நம்பிக்கையும் உண்டு.

 

இந்த வகையில் மக்கள் அதிகம் பலன் பெறும் வகையில் வெறும் 50 ரூபாய் முதலீட்டில் சுமார் 35 லட்சம் ரூபாய் வரையில் பணம் கிடைக்கும் டக்கரான இத்திட்டத்தைப் பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

 போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

முதலீடு செய்யும் போது பலருக்கு ரிஸ்க் எடுக்க விருப்பம் இருக்காது, அப்படி நீங்களும் ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லாதவராக இருந்தால் உங்களுக்குப் போஸ்ட் ஆபீஸ்-ன் சிறு சேமிப்புத் திட்டங்கள் சரியான தேர்வாக இருக்கும்.

போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்புத் திட்டங்கள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கும் காரணத்தால் நிலையான லாபம் மற்றும் 100 சதவீதம் பாதுகாப்பை அளிக்கிறது.

 Gram Suraksha திட்டம்

Gram Suraksha திட்டம்

தற்போது போஸ்ட் ஆபீஸ்-ல் மிகவும் பிரபலமாக விளங்கும் மிக முக்கியமான முதலீட்டுத் திட்டம் தான் Gram Suraksha Scheme இத்திட்டம் ஆபத்து குறைவாகவும், அதிகப்படியான லாபமும் கிடைக்கும் காரணத்தால் நடுத்தர மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த Gram Suraksha திட்டத்தில் நீங்கள் சேர வேண்டும் என்றால் மாதம் 1500 ரூபாய் வரையிலான தொகையை முதலீடு செய்ய வேண்டும்.

 10 லட்சம் ரூபாய் வரை
 

10 லட்சம் ரூபாய் வரை

இத்திட்டம் 19 முதல் 55 வயது உள்ள அனைவரும் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் இத்திட்டத்தில் sum insured அளவு 10,000 முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும் காரணத்தால் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்து லாபம் பெறலாம். இத்திட்டத்திற்கு நீங்கள் மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர முறையில் ப்ரீமியம் செலுத்த முடியும்.

 31.60 லட்சம் ரூபாய்

31.60 லட்சம் ரூபாய்

இந்த வகையில் 19 வயதுடைய நபர் 10 லட்சம் ரூபாய் sum insured அளவீட்டை தேர்வு செய்தால் 55 வயசு வரையில் மாதம் 1515 ரூபாய் செலுத்த வேண்டும் அதாவது தினமும் 50.5 ரூபாய். இதன் மூலம் 55 வயதில் இத்திட்டம் முதிர்வு பெறும் போது 31.60 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

 எல்ஐசி திட்டம்

எல்ஐசி திட்டம்

இதுவே 60 வருடம் வரையில் ப்ரீமியம் செலுத்தினால் 34.60 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த Gram Suraksha திட்டம் எல்ஐசி திட்டம் போலவே இருந்தாலும் சிறு முதலீட்டாளர்களுக்கு அதிகளவில் பலன் அளிக்கக் கூடிய திட்டம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Post Office Gram Suraksha Scheme: Deposit Rs 50 to get Rs 35 lakhs

Post Office Gram Suraksha Scheme: Deposit Rs 50 to get Rs 35 lakhs வெறும் 50 ரூபாய் முதலீட்டில் ரூ.35 லட்சம் கிடைக்கும்.. டக்கரான போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!
Story first published: Saturday, December 25, 2021, 21:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X