மக்களுக்கு நன்றி.. 2வது காலாண்டில் நடந்த மேஜிக்.. மோடி அரசு சொன்ன செம நியூஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி-யின் 2வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழுப் பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

இந்த நிலையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்கம் குறித்து முக்கியமான தகவல்களை வெளியிட்ட மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தனியார் நுகர்வு குறித்து முக்கியமான அறிவிப்பை இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா? Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா?

தனியார் நுகர்வு

தனியார் நுகர்வு

இந்திய ஜிடிபி-யில் தனியார் நுகர்வு அளவு 2023 ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 58.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டு முதல் இதுதான் அதிகப்படியான 2வது காலாண்டு வளர்ச்சி என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தடாலடி உயர்வு

தடாலடி உயர்வு

இந்த தடாலடி உயர்வுக்கு முக்கியமான காரணம் கொரோனா தொற்றில் இருந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் தொடுதல் சார்ந்த துறையில் இருக்கும் அனைத்து துறைகளும் அதிகப்படியான வர்த்தகத்தை பெற்றது. இதில் ஹோட்டல், டிரான்ஸ்போர்ட் ஆகியவை அடக்கம்.

 வேகமாக வளரும் பொருளாதாரம்
 

வேகமாக வளரும் பொருளாதாரம்

உலகெங்கிலும் உள்ள ஏஜென்சிகள் இந்தியா 2023 ஆம் நிதியாண்டில் 6.5-7.0 சதவீதமாக வளர்ச்சி அடைந்து உலகிலேயே வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக அறிவித்து வருகிறது. இந்த நம்பிக்கையான வளர்ச்சிக் கணிப்புகளுக்கு மிக முக்கியமான காரணம் இந்தியப் பொருளாதாரத்தில் தனியார் நுகர்வில் பெரிய அளவில் மீண்டு வருவது தான்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

தனியார் நுகர்வு அதிகரிக்கும் காரணத்தால் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றுமதி தான் முக்கியமான தூண் என்பதில் இருந்து சேவை துறை முக்கியதுவம் பெறுகிறது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

தனியார் நுகர்வு அதிகரிப்பு மூலம் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது, இதன் விளைவாக அனைத்து துறைகளின் உற்பத்தி திறன்தகள் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.

 வேக்சின் பாதுகாப்பு

வேக்சின் பாதுகாப்பு

இந்தியாவில் வேக்சின் பாதுகாப்பு, லாக்டவுன் கட்டுப்பாடுகள் வேகமாக மேம்பட்ட நிலையில் 2வது காலாண்டு காலக்கட்டத்தில் உணவகங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற தொடுதல் அடிப்படையிலான சேவைகளில் செலவழிக்க மக்களை மீண்டும் தூண்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Private consumption as a percentage of GDP stood at 58.4 per cent in Q2 of FY23

Private consumption as a percentage of GDP stood at 58.4 per cent in Q2 of FY23
Story first published: Tuesday, January 31, 2023, 15:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X