முதல் தனியார் ரயில்.. முதல் மாத லாபமே ரூ.70 லட்சம்.. களிப்பில் IRCTC!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை தனியார் மயமாக்கும் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முதல் தனியார் ரயிலாக டெல்லி - லக்னோ இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த அக்டோபர் 4 முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்திய ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் சோதனை முயற்சியாக, டெல்லி - லக்னோ மற்றும் மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களை மத்திய அரசு, ரயில்களை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைத்தது.

இந்த நிலையில் இந்தியாவின் முதல் தனியார் ரயில், தேஜஷ் ரயிலாகத் தான் இருக்கும்.

தனியார் ரயிலில் லாபம்

தனியார் ரயிலில் லாபம்

இந்த நிலையில் இந்த தனியார் ரயில் தனது முதல் லாபமாக 70 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. இந்த நிலையில் 3.70 கோடி ரூபாய்க்கு டிக்கெட்கள் விற்பனை செய்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முதல் தனியார் ரயில் ஒரு நிலையான தொடக்கத்தை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனியார்மய திட்டம்

தனியார்மய திட்டம்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனின் லக்னோ - டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் உலகத் தரம் வாய்ந்த 50 ரயில்வே நிலையங்களை உருவாக்க ரயில்வேயின் முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த நிலையில் 150 ரயில்களை அதன் வலையமைப்பில் இயக்க அனுமதிக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் 5-ம் தேதி இந்த ரயில் இயங்கத் தொடங்கியதில் இருந்து சராசரியாக 80 - 85 சதவிகிதம் வரை இயங்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறப்பு சலுகைகள்

சிறப்பு சலுகைகள்

அதி நவீன ரயிலை இயக்க ஒரு நாளைக்கு 14 லட்சம் ரூபாய் செலவழித்த ரயில்வே துணை நிறுவனம், பயணிகள் கட்டணத்தில் இருந்து மட்டும் தினசரி 17.50 லட்சம் ரூபாய் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும், இதற்காக தனியாக பிக்அப், டிராப் வசதிகள் செய்து தரப்படும் என்றும், இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சலுகைகள்

இன்னும் பல சலுகைகள்

இது தவிர டெல்லி - லக்னோ தேஜஷ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, தேவைப்படுவோருக்கு வாடகை கார், தங்கும் விடுதி பதிவு செய்து தருதல் போன்ற வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த டெல்லி - லக்னோ செல்லும் தேஜஷ் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு இலவச இன்சூரன்ஸ் செய்து தரப்படும், மேலும் இந்த ரயில் பயணிகளுக்காக லக்னோ சந்திப்பில் ஓய்வு அறை வசதிகளும், புதுடெல்லி ரயில் நிலையத்தில் சிறப்பு அறை வசதிகளும், கோரிக்கையின் பேரில் கூட்டங்கள் நடத்துவதற்கான அறை வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போர்டு சேவை வழங்கப்படும்

போர்டு சேவை வழங்கப்படும்

இந்த ரயில்களில் சலுகைகள், சிறப்பு உரிமைகள் போன்றவை கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. இது தவிர தட்கல் ஒதுக்கீடு வசதியும் கிடையாது. ஆனாலும் விமானங்களில் வழங்கப்படும் போர்டு சேவை போலவே வழங்கப்படும் என்றும், இங்கு உணவு, ஆர்.ஓ குடிநீர் மற்றும் காபி மெஷின்கள் என அதிரடியான பல சலுகைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கட்டணங்களும் சாதரண நேரங்களில் ஒரு கட்டணமும், பண்டிகை காலங்களில் வெவ்வேறு கட்டணங்களும் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தனியார்மயம் வழிவகுக்கலாம்

தனியார்மயம் வழிவகுக்கலாம்

இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான இந்த டிக்கெட்களை பயணிகள் irctc.co.in என்ற இணைய தளத்தின் மூலம் பதிவும் செய்து கொள்ளலாம் என்றும், அல்லது மொபைல் ஆப்களிலும், அல்லது ரயில்வே முன்பதிவு மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஐ,ஆர்.சி.டி.சி நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் தனியார் ரயில் நிலையான லாபத்தினை கண்டுள்ள நிலையில், இது அடுத்தடுத்த தனியார்மயத்திற்கு வழிவகுக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: train ரயில்
English summary

Private train: First private train tejas posts Rs.70 lakh in first month profit

First private train tejas posts Rs.70 lakh in first month profit. its signalling for a steady start for the Railways' first "privately" run train.
Story first published: Monday, November 11, 2019, 9:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X