தனியார் இஷ்டத்துக்கு ரயில் கட்டணம் வசூலிக்கலாமாம்! சென்னை ரூட் ரயில்களும் தனியாருக்கு போகிறது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2014-ம் ஆண்டு, முதல் முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்ற பின், திட்டக் குழுவைக் கலைத்து விட்டு நிதி ஆயோக்கை நிறுவினார்கள்.

 

இந்த நிதி ஆயோக் தான் இந்தியாவின் பல முன்னணி திட்டங்களை வடிவமைத்துக் கொண்டு இருக்கிறது. இப்போது இந்திய ரயில்வேஸுக்குச் சொந்தமான ரயில்களை, தனியார் இயக்க ஐடியா கொடுத்த முக்கிய நபர்களில், இவர்களும் ஒரு குழு.

இந்த 150 ரயில்கள் தனியார் இயக்க அனுமதி கொடுக்கும் தனியார்மய நடவடிக்கையில் சில செக்குகளையும் கூடவே வைத்திருக்கிறது நிதி ஆயோக்.

முதலீடு

முதலீடு

'Private Participation: Passenger Trains' என்கிற தலைப்பில், நிதி ஆயோக் ஒரு பேப்பரை விவாதித்து இருக்கிறார்கள். இந்த பேப்பரில் ஆலோசித்த திட்டப் படி, இந்திய ரயில்வேஸுக்குச் சொந்தமான 100 ரயில் வழித் தடங்களில் இயங்கும், 150 ரயில்களை தனியாருக்கு திறந்து விட இருக்கிறார்கள். இதன் மூலம் சுமார் 22,500 கோடி ரூபாய் முதலீடுகள் வருமாம்.

வழித் தடங்கள்

வழித் தடங்கள்

சென்னை - ஓக்லா (கிழக்கு டெல்லி),

ஹவுரா - சென்னை,

செகந்தராபாத் - கெளஹாத்தி,

மும்பை சென்ட்ரல் - நியூ டெல்லி,

நியூ டெல்லி - பாட்னா,

அலஹாபாத் - புனே,

தாத்ரா - வதோதரா,

ஹவுரா - பாட்னா,

இந்தூர் - ஓக்லா,

லக்னெள - ஜம்மு தவி,

ஆனந்த விஹார் - பகல்பூர்,

ஹவுரா - ஆனந்த் விஹார். போன்ற முக்கிய வழிதடங்களும் தனியார் இயக்கத்துக்கு திறந்து விட இருக்கிறார்களாம்.

வெளிநாட்டுக் காரர்களுக்கும்
 

வெளிநாட்டுக் காரர்களுக்கும்

இந்த 100 வழித் தடங்களை 10 - 12 குழுக்களாகப் பிரிக்கப் போகிறார்களாம். இந்த வழித் தடங்களில் ரயில்களை இயக்க, உள்நாட்டு தனியார் கம்பெனிகளோ அல்லது வெளிநாட்டு தனியார் கம்பெனிகளோ யார் வேண்டுமானாலும் வரலாமாம். ஒரு கம்பெனி அதிகபட்சம் 3 குழுக்களில் ரயில்களை இயக்க அனுமதி பெறலாமாம்.

பயணக் கட்டணம்

பயணக் கட்டணம்

தனியார் கம்பெனிகள் (உள்நாடு & வெளிநாடு) , சந்தை நிலவரத்தைப் பொறுத்து கட்டணங்களை வசூலிக்கலாமாம். இதை ஆங்கிலத்தில் ‘The private operator will have the right to collect market-linked fares' எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆக, ரயில்கள் இயக்கம், தனியார் கைக்குச் சென்ற பின், ரயில் பயணச் சீட்டு விலை, இன்னும் ஏற்றம் காணலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

இஷ்டத்துக்கு பெட்டி

இஷ்டத்துக்கு பெட்டி

அதோடு "The private operators will be provided flexibility of class composition and halts" எனவும் ஒரு வரியை இணைத்து இருக்கிறார்கள். ஆக, ஒரு ரயிலில் என்ன மாதிரியான பெட்டிகள் இருக்க வேண்டும், எந்த ரயில் நிலையங்களில் எல்லாம் நிறுத்த வேண்டும் என்பதைக் கூட தனியார் கம்பெனிகள் முடிவு செய்ய முடியும் போலிருக்கிறதே.

தேவை தானா

தேவை தானா

இப்படி தனியார் கம்பெனிகளுக்கு, இந்திய ரயில்வேஸ், எல்லா கதவுகளையும் திறந்துவிட்டு, என்ன லாபம் அடைய இருக்கிறோம் என்று கேட்டால் "புதிய டெக்னாலஜிக்கள் ரயில்வே துறைக்கு வரும், புது வகையான ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகள் எல்லாம் வரும்" எனச் சொல்கிறார்கள் அரசு தரப்பினர்கள்.

ஏழைகள் ஜாக்கிரதை

ஏழைகள் ஜாக்கிரதை

புதுமையை வரவேற்கிறோம். அதற்காக விலை நிர்ணயம், பெட்டிகளை நிர்ணயிப்பதை எல்லாமா தனியாருக்கு தாரை வார்ப்பது..? இந்தியா பணக்காரர்களைக் கொண்ட நாடு அல்ல. 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள், கூலித் தொழிலாளர்களகத் தான் தன் பிழைப்பை நடத்திக் கோண்டு இருக்கும் நாடு எனபதை, அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக் கொள்ளுமென நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

private train operator will have the right to collect market-linked fares

The niti aayog discussion paper (Private Participation: Passenger Trains) said that the private operator will have the right to collect market-linked fares and they will be provided flexibility of class composition and halts
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X