PF கணக்கு வைத்துள்ளீர்களா..? பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு.. வரி சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் அறிக்கையில் ஈபிஎப் திட்டம் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

 

பான் எண்ணுடன் இணைக்கப்படாத ஈபிஎப் கணக்குகளில் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான TDS வரியை குறைக்க அறிவிப்பு வெளியானது.

மோடி அரசு அதிரடி.. 138 பெட்டிங் ஆப், சீன தொடர்புடைய 94 கடன் செயலிகள் தடை..! மோடி அரசு அதிரடி.. 138 பெட்டிங் ஆப், சீன தொடர்புடைய 94 கடன் செயலிகள் தடை..!

பட்ஜெட் 2023

பட்ஜெட் 2023

பட்ஜெட் 2023 அறிவிப்பின் படி ஒருவர் தன்னுடைய பான் கார்டு EPF கணக்கில் இணைக்கப்படவில்லை எனில், பட்ஜெட் 2023 அறிவிப்பின் படி, ஐந்து ஆண்டுகள் முடிவதற்குள் கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணத்திற்குத் தற்போதைய 30 சதவீத வரி விகிதத்திற்குப் பதிலாக 20 சதவீதம் வரி மட்டுமே விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

EPF கணக்கு

EPF கணக்கு

இதேபோல் EPF கணக்கிலிருந்து முன்கூட்டியே பணம் எடுப்பது இப்போது வரி விதிப்புக்கு உட்பட்டது. இந்த நிலையில் 50,000 ரூபாய்க்குள் பணம் எடுக்கப்பட்டால், அந்தத் தொகைக்கு TDS விரிக்கு உட்பட்டது அல்ல.

PAN எண்
 

PAN எண்

உங்கள் EPF கணக்குடன் உங்கள் PAN எண்ணை இணைக்கவில்லை என்றால், 50,000 ரூபாய்க்கு மேல் திரும்பப் பெறுவதற்கு அதிகபட்சமாக 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

ஐந்து ஆண்டுகள்

ஐந்து ஆண்டுகள்

ஈபிஎப் கணக்கைத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் தனிநபர் ஒருவர் தனது EPF கணக்கிலிருந்து பணத்தை எடுத்தால், வித்டிரா செய்யப்படும் தொகைக்கு வரிக்குட்பட்ட வருமானத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும். இதனால் டிசிஎஸ் வரி விதிக்கப்பட்டு வருகிறது.

TDS விதிக்கப்படாது

TDS விதிக்கப்படாது

இதுவே PF கணக்கு வைத்திருப்பவர்களின் பான் கார்டுடன் இணைக்கப்பட்டிருந்தால், திரும்பப் பெறும் தொகைக்கு TDS விதிக்கப்படாது. PF கணக்கில் இருந்து வித்டிரா செய்யப்படும் தொகை PF கணக்கு வைத்திருப்பவரின் வருடாந்திரா வருமானத்தின் கீழ் பான் எண் மூலம் இணைக்கப்படும்.

வருமான வரிப் பலகை

வருமான வரிப் பலகை

இதன் மூலம் PF கணக்கில் இருந்து வித்டிரா செய்யப்படும் தொகைக்கு மொத்தமாக 30 சதவீதம் வரி விதிக்கப்படாமல் PF கணக்காளரின் வருமான வரி பலகையின் அடிப்படையில் வரி பொருந்தும் எனக் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Provident Fund New Rule: PF Withdrawal TDS Cuts to 20 percent for non PAN linked accounts

Provident Fund New Rule: PF Withdrawal TDS Cuts to 20 percent for non PAN linked accounts
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X