மாதம் ரூ.2 லட்சம் வருமானம்.. ஆட்டோ-வை பீட்சா ஹப் ஆக மாற்றிய மொஹபத் தீப் சிங்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் வருகைக்கு பிறகு சொந்த தொழில் மீதான ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது எனலாம். குறிப்பாக நல்ல பணியில் இருந்து வந்த ஊழியர்கள் கூட, பணியினை விட்டு விட்டு சொந்தமாக தொழில் செய்வதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

 

அப்படி அவர்கள் செய்யும் தொழிலானது பலரையும் ஈர்க்கும் விதமாக உள்ளதையும் பார்க்க முடிகிறது.

தாங்கள் பணியில் மேற்கோண்ட சவால்களை அனுபவமாக மாற்றியவர்களுக்கு, தங்களது தொழிலில் புதிய புதிய வணிக யுக்திகள், மக்களை கவரும் விஷயங்கள் என பலவும் ஈர்க்கும் விஷயங்களாகவும் உள்ளன.

கொரோனா காலத்தில் வேலை போச்சு

கொரோனா காலத்தில் வேலை போச்சு

அப்படி கொரோனா காலத்தில் வேலையிழந்த மொஹபத் தீப் சிங் சீமா, பஞ்சாப்-ஐ சேர்ந்தவர். இவரின் மனைவி மன்ப்ரீத் கவுர். பல மாதங்களாக எனது கணவர் ஒரு உணவு டிரக்கினை நடத்துகிறார் என்பதை நான் மக்களிடம் சொல்வதையே தவிர்த்து வந்தேன். ஏனெனில் எனக்கு அது அவமானமாக இருந்தது. ஆரம்பத்தில் பல எதிர்மறையான கருத்துகள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் நான் மனதளவில் சோர்வடைந்தேன்.

பெருமையளிக்கிறது?

பெருமையளிக்கிறது?

ஆகஸ்ட் 2020ல் 4 லட்சம் ரூபாய் முதலீட்டில் இதை தொடங்கிய மொஹபத் , இன்று மாதத்திற்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

இன்று மக்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். எனது கணவர் செய்யும் பீட்சாக்களை வந்து ருசிக்கின்றனர். ஆரம்பத்தில் நான் எனது கணவர் இதனை செய்கிறார் என்பதை சொல்வதையே அவனமாக நினைத்தேன். ஆனால் அவர் விரும்பிய ஒன்றுடன் இணைந்து, இன்று இந்தளவுக்கு வந்துள்ளது எனக்கு மிகவும் பெருமையளிக்கும் ஒன்றாக உள்ளது என மன்ப்ரீத் கூறுகிறார்.

 

டெல்லியில் படித்தேன்
 

டெல்லியில் படித்தேன்

பஞ்சாப் தில்வானில் பிறந்த மொஹபத், எனக்கு 4 வயது இருக்கும்போதே நான் எனது உறவினர்களுடன் டெல்லிக்கு அனுப்பப்பட்டேன். எனது வாழ்க்கையில் 30 ஆண்டுகளை டெல்லியில் தான் கழித்தேன். அங்கே எனது கல்வியினை முடித்த பிறகு, வேலையையும் மேற்கொண்டேன். 12ம் வகுப்பு படித்த பிறகு, ஒரு எம்என்சி நிறுவனத்தில் மாதம் 5000 ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கு செல்ல தொடங்கினேன்.

வேலை செய்து கொண்டே படிப்பு

வேலை செய்து கொண்டே படிப்பு

வேலை செய்து கொண்டே எனது பட்டப்படிப்பினையும் படித்தேன். இதனால் ஐடி மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மற்ற பல பன்னாட்டு நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளேன். நான் எனது மாமாவுடன் சிறு வயதில் வசித்து வந்தேன். அவர்களிடம் பணம் கேட்பதை நான் அப்போது விரும்பியதில்லை. அதற்காகவே வேலை செய்தேன். இதனால் என்னை தற்காத்துக் கொள்ள இது ஒரு சிறந்த வழியாக அமைந்தது.

வேலை இழப்பு

வேலை இழப்பு

எனது பெற்றோர் என்னை அதிகம் கவனிக்கவில்லை என்ற எண்ணத்தில் தான் வளர்ந்தேன். என் மாமாவுடன் என்னை அனுப்பி வைத்தது அந்த எண்ணத்தினை மேலும் அதிகரித்தது. ஆக என்னை நிலை நிறுத்திக் கொள்ள கடுமையாக வேலை செய்தேன். நான் வேலையை இழந்த சமயத்தில் 2.5 ரூபாய்க்கு அருகில் சம்பளம் வாங்கினேன். அது எனக்கு மிக கடினமான ஒன்றாக இருந்தது.

மக்களுக்கு பிடித்தமான உணவுகள்

மக்களுக்கு பிடித்தமான உணவுகள்

எனினும் அதிலிருந்து விரைவில் மீண்டு, ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன். அதன் பிறகு தான் பஞ்சாப் சென்றேன். அங்கு எனது வணிகத்தினை தொடங்க நினைத்தேன். வெற்றிகரமாக சில மாதங்களில் தொடங்கினேன். எனது வணிகத்தில் சில வாரங்களுக்கு ஏற்ற இறக்கம் இருந்தது. ஆரம்பத்தில் பலத்த ஏமாற்றங்களே இருந்தது. பலரும் கேலி செய்தனர். பல சவால்களை கண்டேன்.

சலுகை விலையில் உணவு

சலுகை விலையில் உணவு

எனினும் எனது முடிவில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். ஆரம்பத்தில் சில மாதங்கள் பெரும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தேன். மக்கள் பீட்சாவையும் பர்கரையும் விரும்பவில்லை. அவர்கள் சமோசா, பக்கோடா, சாயாவினையே அதிகம் விரும்பினார்கள். அதுபோன்ற சில உணவுகளையும் எனது மெனுவில் சேர்த்தேன். அதனை வெறும் 199 ரூபாய்க்கு சலுகைகளுடன் கொடுத்தேன்.

 மக்கள் விரும்பும் உணவு

மக்கள் விரும்பும் உணவு

அதனை ருசிபார்க்கவே பலரும் எனது கடைக்கு வர ஆரம்பித்தனர். சிறு வயதில் இருந்தே எனக்கு சமைப்பது மிக பிடிக்கும். எனினும் என்னுடைய சூழ்நிலை என்னை அனுமதிக்கவில்லை. எனினும் அதன் மீதான் ஆர்வம் இருந்து கொண்டே தான் இருந்தது. நான் பீட்சா கற்றுக் கொண்டதே யூடியூப் பார்த்து தான். தற்போது மக்கள் என்னுடையை கடையை தேடி வருகின்றனர். பீட்சாக்களை விரும்பி ருசிக்கின்றனர். இதுவே இன்று எனது வெற்றிகரமான வணிகமாகவும் மாறியுள்ளது.

விவசாய கூட்டுக் குடும்பம்

விவசாய கூட்டுக் குடும்பம்

மிகப்பெரிய விவசாய கூட்டுகுடும்பத்தில் பிறந்த நான், விவசாயத்தில் ஈடுபட நினைக்கவில்லை. எனினும் அதிலிருந்து நான் முற்றிலும் விலகவில்லை. நான் பல இடங்களுக்கு பயணம் செய்ததால் எனக்கு பல வகையான உணவுகளை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே என்னை தி பீட்சா பேக்டரி தொடங்கவும் தூண்டுகோலாக இருந்தது என்கிறார் மொஹபத்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Punjab Man Who Turned Auto into Pizza Hub: Earns Rs 2 Lakhs a Month

Punjab Man Who Turned Auto into Pizza Hub: Earns Rs 2 Lakhs a Month/மாதம் ரூ.2 லட்சம் வருமானம்.. ஆட்டோ டிரக்கினையே பீட்சா ஹப்பாக மாற்றிய மொஹபத் .. !
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X