தேசபக்தி முக்கியம்.. ரஷ்ய பணக்காரர்களுக்கு புடின் உத்தரவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமைகள் ஆணையர் Maria Lvova-Belova ஆகியோர் மீது போர்க் குற்றங்களுக்காக கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ரோம் சட்டம் எனப்படும் 1998 உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உலக நாடுகளின் போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு நிலையான அமைப்பாக உள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீதான கைது வாரண்ட் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில், இந்த நிலையில் விளாடிமிர் புடின் பணக்காரர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

 ரகசிய காதலிக்காக.. சொத்துக்களை வாங்கிக் குவிக்கும்.. ரஷ்ய அதிபர் புடின்! ரகசிய காதலிக்காக.. சொத்துக்களை வாங்கிக் குவிக்கும்.. ரஷ்ய அதிபர் புடின்!

 ரஷ்யா உக்ரைன்

ரஷ்யா உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் மீதான போரின் மூலம் உக்ரைனை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளையும் எதிர்த்து வருகிறார். கொரோனாவுக்கு பின்பு 2022 பிப்ரவரி மாதம் இறுதியில் துவங்கிய இந்த போர் ஒரு வருடத்திற்கும் அதிகமாக நடந்து வருகிறது. இந்த ஒரு வருடத்தில் ரஷ்யா பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.

விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின்

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்யாவை மேலும் வலிமையாக்க அந்நாட்டு பெரும் பணக்காரர்களுக்கு முக்கியமான அறிவுறை கூறியுள்ளார். இது பணக்காரர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் அந்நாட்டு மக்கள் மத்தியிலும் பாசிடிவ் ஆன அணுகுமுறையை அறிவித்துள்ளது.

பில்லியனர்கள்

பில்லியனர்கள்

விளாடிமிர் புடின் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ரஷ்யாவின் பில்லியனர்களை லாபத்திற்கு முன் தேசபக்தியை வைக்குமாறு வலியுறுத்தினார், மேற்கத்திய தடைகளை எதிர்கொண்டு பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வெளிநாட்டில் முதலீடு செய்யாமல் உள்நாட்டிலேயே முதலீடு செய்யுமாறு கூறினார்.

போர், வர்த்தகம், வருமானம்

போர், வர்த்தகம், வருமானம்

உக்ரைன் மீதான போர் துவங்கிய நாளில் இருந்து போர், வர்த்தகம், வருமானம், வெளிநாட்டு வர்த்தகத்தில் மிகவும் பிசியாக இருக்கும் விளாடிமிர் புடின், முதல் முறையாக ரஷ்ய பில்லியனர்கள், தொழிலதிபர்கள் உடன் முக்கியமான கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

பொறுப்பான குடிமகன்

பொறுப்பான குடிமகன்

இக்கூட்டத்தில் நாடு மற்றும் அரசின் விருப்பத்திற்கு இணையாக இங்கும் ஒரு தொழில்முனைவோர் தான் ஒரு பொறுப்பான குடிமகனாக இருக்க முடியும் என புடின் பேசியுள்ளார். வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி குவிப்பது, அதை ரஷ்ய அரசிடம் மறைப்பது பெரும் தவறு. இதேபோல் நிறுவனத்தை ரஷ்யாவில் பதிவு செய்து, இங்கு முதலீடு செய்து, இங்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என பேசியுள்ளார்.

பெரும் பணக்காரர்கள்

பெரும் பணக்காரர்கள்

இந்த கூட்டத்தில் ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களாக இருக்கும் Oleg Deripaska, Vladimir Potanin, Alexei Mordashov, German Khan, Viktor Vekselberg, Viktor Rashnikov, Andrei Melnichenko, Dmitry Mazepin ஆகியோர் இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

ரஷ்ய முதலீடுகள்

ரஷ்ய முதலீடுகள்

இதன் மூலம் இனி வரும் காலத்தில் ரஷ்யாவின் முதலீடுகள் வெளிநாடுகளுக்கு செல்வது பெரிய அளவில் குறையும். இதேபோல் வெளிநாடுகளில் இருக்கும் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Putin important meeting with Russian billionaires; Put patriotism at first

Putin important meeting with Russian billionaires; Put patriotism at first
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X