கத்தாரில் நுழைய இந்தியர்களுக்குத் தடை! ஏன்? எதற்கு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று தான் இந்த கத்தார்.

 

குட்டி நாடு என்றாலும், எண்ணெய் வளத்தால், தன்னை வளர்த்து எடுத்துக் கொண்டு இருக்கிறது கத்தார்.

இப்போது கத்தாரில் கூட இந்தியர்களுக்கு தடை விதித்து இருக்கிறார்களாம். ஏன் இந்தத் தடை..? இந்தியர்களைத் தவிர வேறு யாருக்காவது தடை இருக்கிறதா..? விரிவாகப் பார்ப்போம்.

கத்தார் தடை

கத்தார் தடை

இந்தியா உள்ளிட்ட 14 நாட்டு மக்கள் கத்தாரில் நுழைய ஒரு தற்காலிகத் தடையை விதித்து இருக்கிறது கத்தார். இந்தியா, சீனா, வங்க தேசம், எகிப்து, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, சிரியா, தாய்லாந்து போன்ற நாட்டு மக்கள் கத்தாரில் நுழைய தற்காலிகத் தடை விதித்து இருக்கிறார்களாம்.

ஏன் இந்த தடை

ஏன் இந்த தடை

உலகம் முழுக்க பரவிக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கத் தான், முன் எச்சரிக்கையாக, மேலே சொன்ன நாட்டு மக்களுக்கு தற்காலிகத் தடை விதித்து இருக்கிறார்களாம். இதை கத்தார் அரசாங்கமே மார்ச் 8, 2020 அன்று உறுதி செய்து இருக்கிறது.

சிக்கல்
 

சிக்கல்

இந்த தற்காலிக தடையால், இந்தியாவில் இருந்து கத்தார் நாட்டுக்குச் சென்று விசா எடுத்துக் கொள்ள இருப்பவர்கள், கத்தார் நாட்டிலேயே தங்கி இருப்பவர்கள், கத்தாரில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் தற்காலிகமாக கத்தாருக்கு வருபவர்கள் என பலருக்கும் சிரமம் ஏற்படலாம். பின்ன விஷயம் கொரோனா வைரஸ் ஆயிற்றே.

விமான சேவைகள்

விமான சேவைகள்

கத்தார் நாட்டின் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், ஒரு வாரத்துக்கு சுமாராக 102 விமானங்களை இந்திய நகரங்களுக்கு இயக்குகிறதாம். 13 இந்திய நகரங்களுக்கும், கத்தார் நாட்டுக்கும் இடையில் இயக்கும் இந்த விமானங்களை ரத்து செய்து இருக்கிறார்களாம். காரணம் கேட்டால், இந்த கொரோனா பரவாமல் இருக்க இதுவும் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை என்கிறார்களாம்.

மற்ற நிறுவனங்கள்

மற்ற நிறுவனங்கள்

கத்தார் ஏர்வேஸைத் தொடர்ந்து இந்தியாவில் இயக்கப்படும் குவைத் நாட்டு விமானங்களும் ரத்து செய்து இருக்கிறார்களாம். இந்தியா - கத்தார் நாட்டுக்கு, கத்தார் ஏர்வேஸ் தவிர, இண்டிகோ, கோ ஏர், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் விமானங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறார்களாம். இதுவரை இந்த 3 நிறுவனங்கள் தங்கள் விமான சேவையைக் குறித்து எதையும் குறிப்பிடவில்லை.

கட்டுப்படுத்துங்க

கட்டுப்படுத்துங்க

இப்படி கொரோனா பயத்தால் எல்லா நாடுகளும் கேட் போடத் தொடங்கினால் உலகம் எப்படி சார் இயங்கும். ஏற்கனவே உலக பொருளாதாரம் இந்த கொரோனாவால் அல்லோலப் பட்டுக் கொண்டு இருக்கிறது. யாராவது எதையாவது செய்து இந்த வைரஸை கட்டுப்படுத்துங்க சார். இல்லாட்டி இந்த வைரஸ எதிர்க்கிற மருந்தையாவது கண்டுபிடிங்க. இந்த அவைரஸ் தொல்ல தாங்க முடியல.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

qatar bans entry of indian and 13 other countries

Qatar government has raised a ban on 14 country citizens including india to enter qatar. Qatar airways stopped their service to india.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X