பிரிட்டன் ராணி எலிசபெத்-தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டனில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் காலமானார்.

1952ல் அரியணைக்கு வந்த ராணி எலிசபெத், தனது பதவிகால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார்.

பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, நாட்டின் ராணியாக பதவியேற்றவர் அவரது 25 வயது மகள் 2ம் எலிசபெத் ஆவார்.

ராணி மகாராணி... எலிசபெத் ராணி - அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனைராணி மகாராணி... எலிசபெத் ராணி - அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனை

போரீஸ் ஜான்சனுக்கு பிரிவு உபசார விழா

போரீஸ் ஜான்சனுக்கு பிரிவு உபசார விழா

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிட்டன் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சனுக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்ட அவரை, வாழ்த்தியதோடு புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள லிஸ் டிரஸும் வாழ்த்து பெற்றார். எப்போதும் பிரதமராய் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்திக்கும் ரானி, இந்த முறை பால்மாரல் அரண்மனையில் சந்தித்தார். திடீரென உடல் நலம் குன்றிய எலிசபெத்தினை தீவிர கண்கானிப்பில் வைத்திருந்திருந்த அவர்கள், தொடர்ந்து சிகிச்சையும் அளித்து வந்தனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த நிலையில் தான் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அரண்மனை வெளியிட்டுள்ளது. அவரது உடல் நாளை லண்டனுக்கு கொண்டு வரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 சொத்து மதிப்பு?
 

சொத்து மதிப்பு?

70 ஆண்டுகள் ஆளுகை செய்த எலிசபெத்தின் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலருக்கும் மேல். அவர் தற்போது இல்லை என்ற நிலையில் அவரின் சொத்துக்கள் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சம்பளம் எப்படி?

சம்பளம் எப்படி?

பிரிட்டீஷ் அரசு குடும்பத்திற்கு ஆண்டுதேறும் செலுத்தப்படும் இறையாண்மை கிராண்ட் எனப்படும் வரி செலுத்துவோர் மூலம் ராணிக்கு வருமானம் கிடைக்கும். இது பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு ஆண்டுதோறும் செலுத்தப்படும். எனினும் ராணியின் வருமானம் இது மட்டும் அல்ல, இன்று உலகளாவிய வணிக சாம்ராஜ்ஜியமாக கருதப்படுகிறது. இதன் மூலம் வருமானம் கிடைக்கிறது.

எவ்வளவு?

எவ்வளவு?

கடந்த 2021 - 2022 காலகட்டத்தில் ராணி எலிசபெத்துக்கு 86 மில்லியன் பவுண்டுகள் கிராண்ட் தொகையாக கொடுக்கப்பட்டது. இது அலுவல் ரீதியான பயணம், சொத்து பராமரிப்பு, செயல்பாடு, பராமரிப்பு செலவினங்கள் என பலவும் அடங்கும். எனினும் இது மட்டுமே ராணிக்கு கிடைத்த வருமானம் அல்ல.

ராயல் நிறுவனம்

ராயல் நிறுவனம்

மொனார்கி பி எல் சி என்று அழைக்கப்படும் நிறுவனம் ராணி குடும்பத்தினால் நடத்தப்படும் ஒரு வணிக சாம்ராஜ்ஜியமாகும்.

போர்ப்ஸ் அறிக்கையின் படி, 2021ம் ஆண்டு நிலவரப்படி கிட்டதட்ட 28 பில்லியன் டாலர் ரியல் எஸ்டேட் சொத்துகளை வைத்திருக்கிறது. இதனை விற்பனை செய்ய முடியாது.

இதில் கிரவுன் எஸ்ட்டேட் - 19.5 பில்லியன் டாலர்

பக்கிம்ஹாங் அரண்மனை - 4.9 பில்லியன் டாலர்

தி டச்சி ஆஃப் கார்ன்வால் - 1.3 பில்லியன் டாலர்

தி டச்சி ஆஃப் லாங்காஸ்டர் - 748 மில்லியன் டாலர்

கென்சிங்டன் அரண்மனி - 630 மில்லியன் டலார்

ஸ்ஜ்காட்லாந்தின் கிரவுன் எஸ்டேட் - 592 மில்லியன் டாலர்

இதன் மூலம் வணிக ரீதியாக அரச குடும்பம் லாபம் ஈட்ட முடியாது என்றாலும், பொருளாதாரத்தினை உயர்த்துவதே இதன் நோக்கமாக உள்ளது.

 

தனிப்பட்ட சொத்துகள்

தனிப்பட்ட சொத்துகள்

ராணி எலிசபெத்துக்கு தனிப்பட்ட முறையில் விலையுயர்ந்த ஓவிய படைப்புகள், நகைகள், ரியல் எஸ்டேட் சொத்துகள், பல முதலீடுகள் என பலவும் உள்ளன. இதில் பெரும்பாலான சொத்துகள் இளவரசர் சார்லஸ் அரியணை ஏறும்போது அவருக்கு கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சொத்துகளுக்கு இங்கிலாந்து சட்டத்தின் படி வரி விலக்கும் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Queen second Elizabeth died: here's what will happen to her $500 million fortune

Queen second Elizabeth died: here's what will happen to her $500 million fortune/ பிரிட்டன் ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X