ஒரேயொரு வீடியோ.. நிறுவனங்களை மிரட்டும் ஊழியர்கள்.. Rage Applying புதிய டிரெண்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வேலைவாய்ப்பு சந்தையில் பல முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய வர்த்தக சூழ்நிலைக்கு ஏற்ப பல பணியாளர்கள் புதிய சவால்களை எதிர்கொள்ளவும், புதிய திறன்களைக் வளர்த்துக்கொள்ளவும், பணியை புதிய துறையில் மாற்றவும் ஆர்வமாக உள்ளனர்.

இதை விட முக்கியமாக தற்போது மக்கள் முன்பை விட work-life balance-ஐ மிகவும் முக்கியமானதாக கருதுகின்றனர். இதன் வாயிலாக ஊழியர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் நிறுவனங்களுக்கும் பல சவால்களை உருவாகியுள்ளது என்றால் மிகையில்லை.

கனடாவில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு.. சிவப்பு கம்பள வரவேற்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட் தான்! கனடாவில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு.. சிவப்பு கம்பள வரவேற்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட் தான்!

 புதிய டிரெண்ட் Rage Applying

புதிய டிரெண்ட் Rage Applying

இந்த நிலையில் ஊழியர்கள் பணிபுரிய விரும்பும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. Great Resignation, Quiet Quitting ஆகியவற்றை தாண்டி தற்போது வேலைவாய்ப்பு சந்தையில் Rage Applying என்பது புதிய டிரென்டாகி வருகிறது.

Great Resignation காலம்

Great Resignation காலம்

2021ல் கொரோனா தொற்றில் இருந்து வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்த போது Great Resignation காலம் உருவானது. சந்தையில் திடீரென அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவான காரணத்தால், ஊழியர்களுக்கான டிமாண்ட் உச்சம் தொட அனைத்து மட்ட நிறுவனங்களிலும் ஊழியர்களும் வேலையை ராஜினாமா செய்து புதிய நிறுவனத்தில், அதிகப்படியான சம்பளத்தில் பணியில் சேர்ந்தனர்.

Quiet Quitting காலச்சாரம்

Quiet Quitting காலச்சாரம்

இதே நேரத்தில் தான் உலகம் முழுவதும் Quiet Quitting காலச்சாரம் அனைத்து துறையிலும், அனைத்து மட்டத்திலும் உருவானது. ஒரு நிறுவனத்தில் வேலையை ராஜினாமா செய்ய முடியாத நிலையில், அதிகப்படியான டார்கெட், வேலைச் சுமையை ஏற்றுக்கொள்ள முடியாத விருப்பம் இல்லாமல் வேலை செய்ய வேண்டுமென் என்பதற்காக செய்யும் மனநிலை தான் Quiet Quitting.

வளர்ச்சி

வளர்ச்சி

இத்தகைய ஊழியர்களால் நிறுவனத்திற்கு நஷ்டம் இல்லையென்றாலும் வளர்ச்சி இருக்காது, அதேபோல் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது. இந்த quiet quitting மனநிலை அதிகப்படியான வேலைச் சுமையை எதிர்கொண்டும் குறைவான சம்பள உயர்வு அல்லது எதிர்பார்த்த பதவி உயர்வு, அங்கிகாரம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் ஊழியர்கள் மத்தியில் உருவாகிறது.

 Rage Applying - புதிய டிரெண்ட்

Rage Applying - புதிய டிரெண்ட்

இந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு சந்தையில் Rage Applying என்ற புதிய டிரெண்ட் உருவாகியுள்ளதாக ​​பார்ச்சூன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா முதல் அமெரிக்கா வரையில் இருக்கும் நிறுவனங்களுக்கு பெரும் தலைவலி உருவாகியுள்ளது.

Rage Applying என்றால் என்ன..?

Rage Applying என்றால் என்ன..?


Rage Applying என்பது ஒரு ஊழியர் தற்போது பணியாற்றும் நிறுவன பணியில் மனநிறைவு கிடைக்காத நிலையில், கிடைக்கும் அனைத்து வேலைவாய்ப்புகளுக்கு அப்ளை செய்வது தான். இந்த கலாச்சாரம் தற்போது அதிகரித்தள்ளதாக பார்சூன் ஆய்வு கூறுகிறது.

இக்காலாச்சாரம் உருவாக்க என்ன காரணம்..?

இக்காலாச்சாரம் உருவாக்க என்ன காரணம்..?

தற்போது செய்யும் வேலையில் முற்றிலும் சோர்வடைந்த நிலையிலும், செய்யும் வேலைக்கு சரியான பாராட்டு கிடைக்காத நிலையிலும் வேறு வேலைக்கு தேட துவங்கும் நிலை உருவாகும், ஆனால் Rage Applying காலாச்சாரம் உருவாக்க முக்கிய காரணம் தற்போது செய்யும் பணியில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்பதற்காக செய்யப்படுபவை.

பிரபலம்

பிரபலம்

கனடா நாட்டை சேர்ந்த Redweez என்பவரின் வீடியோ மூலம் இந்த Rage Applying காலாச்சாரம் சமுக வலைத்தளத்தில் பிரபலமானது. இந்த வீடியோவில் Redweez என்னுடைய வேலை மிகவும் கடுப்பேற்றிய காரணத்தால், நான் புதிய வேலைவாய்ப்புக்காக Rage Apply செய்ய துவங்கினேன்.

25000 டாலர் சம்பள உயர்வு

25000 டாலர் சம்பள உயர்வு

கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளுக்கு அப்ளை செய்தேன். தற்போது 25000 டாலர் சம்பள உயர்வுடன் புதிய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, தற்போது பணியாற்றி வரும் நிறுவனம் மிகவும் சிறப்பான நிறுவனம். எனவே வேலை பிடிக்கவில்லை எனில் Rage Apply செய்யுங்கள் கட்டாயம் நடக்கும் என தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rage Applying New Trend in jobs sector worldwide After Quiet Quitting

Rage Applying New Trend in jobs sector worldwide After Quiet Quitting
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X