சுதந்திரத்திற்கு பிறகு இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை எதிர்கொள்கிறது.. ரகுராம் ராஜன் எச்சரிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா என்னும் கொடிய வைரஸ் இந்தியா மட்டும் அல்ல, உலகத்தினையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 3,577 பேர் கொரோனாவினால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், இதுவரை 83 பேர் பலியாகியுள்ளனர்.

Recommended Video

இந்திய பொருளாதாரம் பெருத்த அடி வாங்கும்.. நிபுணர்கள் கருத்து..!

இதற்கிடையில் இந்த கொடிய வைரஸினால் உலகப் பொருளாதாரமும் சீர்குலைந்து வருகிறது. அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் இருந்து வருகிறது.

இது மட்டும் அல்ல, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு 21 நாள் லாக்டவுன் உத்தவிரனை பிறப்பித்துள்ள நிலையில், இந்த உத்தரவானது இன்னும் நீடிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மிகப்பெரிய அவசர நிலை

மிகப்பெரிய அவசர நிலை

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சுதந்திரத்திற்கு பிறகு இந்திய பொருளாதாரம், மிகப்பெரிய அவசர நிலையை எதிர்கொண்டுள்ளது. இது கடந்த 2008 - 09 ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியினை விட மிக கடுமையானது. தற்போதைய நிலைமையில் கூட தொழிலாளர்கள் நிதி நெருக்கடியின் காரணமாக வேலைக்கு செல்ல முடியும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

கடந்த 2008 - 2009-ம் ஆண்டில் நிலவிய நிதி நெருக்கடி பிரச்சனையானது உலகளவில் மிகப்பெரிய பிரச்சனையாக கருதப்பட்டது. அதுவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்து வந்தது. ஆனால் தற்போதும் கூட தொழிலாளர்கள் இன்னும் கூட வேலைக்கு செல்ல முடியும். எங்கள் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக வலுவான வளர்ச்சியில் இருந்து வந்தன.

அரசுக்கு பரிந்துரை

அரசுக்கு பரிந்துரை

எங்களின் நிதி நிலையும் நன்றாகத் தான் இருந்தது. ஏன் எங்களின் அரசாங்கத்தின் நிதி நிலையும் ஆரோக்கியமாகத்தான் இருந்தது. ஆனால் கொரோனா வைரஸினை எதிர்த்து போராடி வரும் நிலையில், இவை தற்போது எதுவும் உண்மை இல்லை என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். எனினும் தற்போது பொருளாதாரத்தினை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என அரசுக்கு நிபுணர்கள் தங்களது பரிந்துரையை செய்து வருகின்றனர்.

மீட்பு நடவடிக்கை

மீட்பு நடவடிக்கை

இந்த நிலையில் குறைந்த தொற்று பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை எவ்வாறு மறுதொடக்கம் செய்வது என்பது குறித்து அரசாங்கம் இப்போது திட்டமிட வேண்டும். ஏனெனில் ஊரடங்கினை நீண்ட காலத்திற்கு நீட்டிக்கவும் முடியாது எனவும் ரகுராம் ராஜன் தனது வலைபதிவில் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உற்பத்தி ஊக்குவிப்பு

உற்பத்தி ஊக்குவிப்பு

மேலும் ஆரோக்கியமான இளைஞர்களை பணியிடத்திற்கு அருகிலேயே தங்க வைக்கலாம். போதுமான சமூக இடைவெளியை பயன்படுத்தலாம். இதன் மூலம் உற்பத்தியாளர்கள் உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும். விநியோக சங்கிலியை தவறாமல் பின்பற்ற பட வேண்டும். இதற்காக உற்பத்தியாளர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

நிதி ஆதாரம் பற்றி கவலை

நிதி ஆதாரம் பற்றி கவலை

இது மட்டும் அல்ல நிதி ஆதாரங்கள் குறித்தும் ரகுராம் ராஜன் கவலை தெரிவித்துள்ளார். எனினும் அரசு ஏழைக்களுக்காக செலவிடுவதை இன்னும் கவனிக்க வேண்டும். ஆக அரசின் வேண்டுகோளை ஏற்று மக்களும் செயல்பட வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram Rajan said Indian economy faces greatest emergency since independence day

Reserve bank of india governor Raghuram rajan said Indian economy is facing the greatest emergency since independence.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X