மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.. ரகுராம் ராஜன் சூப்பர் கருத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியா மிகப்பெரிய நாடு என்பதால், ஒன்றிய அரசே அனைத்து மாநிலங்களையும் நிர்வகிப்பது கடினம். ஆக நிர்வாகத்தினை எளிமையாக்கவும், மக்களுக்கு அதிகாரம் அளிக்கவும் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

 

அப்படி மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கினால் தான் ஜனநாயகம் வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார்.

ரூ.9,300-க்கு மேல் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன.. வாங்கலாமா..!

இது குறித்து தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உடனான வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் பங்கேற்ற, முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

இது ஜனநாயகத்தை வலுப்படுத்தும்

இது ஜனநாயகத்தை வலுப்படுத்தும்

மேலும் மத்திய அரசின் தேவை என்பது இருந்தாலும், மாநில அரசுகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இது தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும், மத்திய அரசுக்கு போதுமான அதிகாரங்கள் இருக்க வேண்டும். எனினும் மாநிலத்திற்கும், மாநிலத்தில் இருந்து நகராட்சிகளுக்கும், நகராட்சியில் இருந்து உள்ளாட்சிகளுக்கும், உள்ளாட்சிகளில் இருந்து மக்களிடமும் இருக்க வேண்டும். மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அது ஜனநாயகத்தினை வலுப்படுத்தும்.

மக்கள் மத்தியில் நம்பிக்கை

மக்கள் மத்தியில் நம்பிக்கை

அது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை உருவாக்கும். இப்போது காணப்படும் மிகப் பெரிய குறைபாடுகளில் ஒன்று, பொதுமக்களுக்கு தெரியாத வகையில் முடிவெடுப்பது. இந்தியாவில் பலவற்றை மையப்படுத்தியிருக்கிறோம். சுதந்திரத்தின் பின்னர் அதனை ஆரம்பத்தில் மையப்படுத்தினோம். ஏனெனில் ஒருபாட்டை காக்க விரும்பினோம். காலபோக்கில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை பரவாக்க முயற்சிக்கப்பட்டது.

போதிய நிதி கிடைப்பதில்லை
 

போதிய நிதி கிடைப்பதில்லை

பஞ்சாயத்து ராஜ் அரசியலமைப்பு திருத்தங்கள், நகராட்சிகள் மற்றும் கிராமங்களை நோக்கி இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த பஞ்சாயத்து ராஜ் சட்டம் என்பது உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் தேவைகளை, வளர்ச்சியினை ஊக்குவிக்க திட்டமிட்டு நிறைவேற்றிக் கொள்ளும் சட்டம் அமைப்பு ஆகும்.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான மாவட்ட ஊராட்சி, வட்டார அளவிலான ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம அளவில் கிராம ஊராட்சிகள் கொண்டுள்ளது. ஆனால் தற்போது இந்த சட்டம் செயல்படாமலேயே உள்ளது. அவர்களுக்கு போதிய நிதி கிடைக்கவில்லை என ராஜன் கூறியுள்ளார்.

மூன்று சீர்திருத்தம் அவசியம்

மூன்று சீர்திருத்தம் அவசியம்

இதே தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த கூட்டத்தில், மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஒன்று கட்டமைப்பு மாற்றம், இரண்டாவது கட்டமைப்புக்கு தேவையான மூலதனம் திரட்டல், இவை இரண்டும் சேர்ந்தால் சமூகத்தினை சீர்திருத்தத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எதில் கவனம்

எதில் கவனம்

மேலும் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு, குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு, தனி நபர் வருமானம், சமூக வளர்ச்சி, குழந்தை இறப்பு, சுகாதார குறிகாட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் (மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில்) நாங்கள் பெருமை கொள்கிறோம். ஆனால் ஆலோசகர்களின் கருத்துப்படி, குழந்தைகளை எப்படி திரும்ப பள்ளிக்கு திரும்ப கொண்டு வருகிறோம், அவர்கள் பள்ளிக்கு திரும்புவதை எப்படி உறுதிப்படுத்துவது, நிரந்தரமாக இடை நிறுத்தங்கள் இல்லை என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram rajan says more power needs to state government

RBI former governor said india is too big to be managed from the centre, also he said that more power needs to be vested with the state
Story first published: Saturday, September 11, 2021, 13:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X