அதிர்ச்சியளிக்கும் ராகுல் பஜாஜின் மறைவு.. தொழிற்துறையில் மாபெரும் வெற்றிடம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் சகஜமான விஷயம் தான். ஆனால் சிலரின் மறைவினை ஊரே பேசும். அந்தளவுக்கு இன்று பேசுப்படுவர் ராகுல் பஜாஜ்.

 

பஜாஜ் நிறுவனத்தின் ஆணி வேராக இருந்த ராகுல் பஜாஜ் சனிக்கிழமையன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

கொல்கத்தாவில் பிறந்த ராகுல், ஒரு வணிக குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் அவரின் ரத்தத்திலேயே கலந்துள்ளது வணிக ரத்தம். அமெரிக்காவில் ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படித்தவர்.

பஜாஜ் தலைவர்

பஜாஜ் தலைவர்

படிப்பினை முடித்த கையோடு பஜாஜ் நிறுவனத்தில் துணை பொது மேலாளாராக பதவியேற்றார். அதன் பிறகு கடின உழைப்புக்கு மத்தியில் 1968ல் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார். பஜாஜ் நிறுவனத்தின் பொறுப்பினை ஏற்பதற்கு முன்பு வரையில், பஜாஜ் நிறுவனம் இரு சக்கர வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்து வந்தது.

பஜாஜ் நிதிச் சேவைகள்

பஜாஜ் நிதிச் சேவைகள்

ஆனால் அதன் பிறகு இன்சூரன்ஸ், நிதித்துறை, பல்வேறு பொருட்கள் உற்பத்தி என பல தொழில்களிலும் காலூன்றியுள்ளார்.
இதன் சந்தை மதிப்பு 8.4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கொண்ட ஒரு மாபெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. பஜாஜ் குழுமத்தின் மதிப்பீட்டில் சுமார் 80% நிதிச் சேவைகளான பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் பின்சர்வ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

நிதி வணிகம்
 

நிதி வணிகம்

நாட்டிலுள்ள ஒவ்வொரு வணிக குழுமமும், உள் நிதிச் சேவை நிறுவனத்தினை கொண்டுள்ளன. இது வாகனத் தொழிலுக்கு தேவையான நிதியினை வழங்குகிறது. இவை உற்பத்தி வணிகத்துடன் இணைக்கப்படுகின்றன. இது பெரிய வங்கிகளை விட, சிறு நிதி நிறுவனங்கள் பெரியளவிலான சிறு நிதி கடன் திட்டத்தினை உருவாக்க முடியும். இதன் ஆரம்ப நோக்கம் வாகன கடனுக்கு நிதியளிப்பதாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் நிதித் துறையில் பெரும் பங்கு அளிக்கிறது.

மூலதனம்

மூலதனம்

எனினும் கடந்த 2008ல் தனது இரு மகன்களான சஞ்சீவ் மற்றும் ராஜீவ் இடையேயான பொறுப்புகளை பிரித்து அளித்த போது, வாகன நிறுவனம் மற்றும் நிதி சேவை நிறுவனத்தையும் பிரித்தது. பிரித்தாலும் ஒவ்வொருவருக்கும் சுமார் 8,000 கோடி ரூபாய் மூலதனத்தினை கொண்டுள்ளது.

இப்படி தொழிற்துறையில் கடினமான உழைப்பாளியாக இருந்து வெற்றி பெற்ற ராகுல் பஜாஜ், தொழில் முனைவோரின் நலனுக்காக கடைசி வரை போராடியவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

rahul bajaj passes away: 80% of bajaj group's valuation comes from financial services

rahul bajaj passes away: 80% of bajaj group's valuation comes from financial services/அதிர்ச்சியளிக்கும் ராகுல் பஜாஜின் மறைவு.. தொழிற்துறையில் மாபெரும் வெற்றிடம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X