ரயில் புக்கிங் சேவைகள் கால வரையின்றி ரத்து! சுமார் 40 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவின் கடைசி மற்றும் பலமான ஆயுதம் சமூக விலகள் தான்.

அதனால் லாக் டவுனை மீண்டும் மே 03, 2020, ஞாயிற்றுக் கிழமை வரை நீட்டித்து இருக்கிறது மத்திய அரசு.

இந்த லாக் டவுன் 2.0-வால் பல தரப்பினரும் பல வகையில் பாதிக்கப்பட இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.

ரயில்கள்

ரயில்கள்

ஆனால், உயிருடன் இருப்பார்கள், அவர்கள் உடல் நலத்து பங்கம் ஏற்படாது என்பது தான் இந்த லாக் டவுன் 2.0 கொடுக்கும் ஒரு ஆறுதலான விஷயம். இந்த லாக் டவுனை அறிவித்த உடனேயே, ரயில்வேஸ் மே 03, 2020 வரையான அனைத்து ரயில்களையும் ரத்து செய்து இருக்கிறது.

ரயில் டிக்கெட்

ரயில் டிக்கெட்

ரயில்வேஸ், ஏப்ரல் 15 முதல் மே 03, 2020 வரை முன் பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளையும் ரத்து செய்ய இருப்பதாக லைவ் மிண்ட் பத்திரிகையில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த ஏப்ரல் 15 - மே 03 வரைக்குமான தேதிகளில், ரயில்களில் பயணம் செய்ய சுமார் 39 லட்சம் பயணச் சீட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டு இருந்தனவாம். இப்போது அத்தனை டிக்கேட்டுகளையும் ரத்து செய்ய இருக்கிறது ரயில்வேஸ்.

ரீ ஃபண்ட்
 

ரீ ஃபண்ட்

முன் பதிவு செய்த பயணிகளுக்கு முழு ரீஃபண்டடை ஐ ஆர் சி டி சி வழங்கும் எனவும் ரயில்வே நிர்வாகம் சொல்லி இருக்கிறது. அதே போல பயணச்சீட்டை முன் பதிவு செய்தவர்கள், தங்கள் டிக்கெட்களை ரத்து செய்ய வேண்டிய அரசியம் இல்லை, தானாகவே ரத்து செய்யப்பட்டு முழு தொகை ரீஃபண்ட் வழங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ரயில்வேஸ்.

முன் பதிவு சேவை ரத்து

முன் பதிவு சேவை ரத்து

அதோடு, அடுத்து அடுத்து வரும் தேதிகளுக்கான, முன் பதிவு சேவைகளையும் முழுமையாக ரத்து செய்து இருக்கிறது இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம். இதை நாம் டிக்கெட் புக் செய்ய முயற்சிப்பதற்கு முன்பே, ஐ ஆர் சி டி சி வலைதளத்தில் நுழையும் போதே தெளிவாக அலர்ட் செய்து விடுகிறார்கள். அந்த அலர்ட்டை மேலே படத்தில் பார்க்கலாம்.

120 நாள் கணக்கு

120 நாள் கணக்கு

இன்று ஏப்ரல் 14, 2020 என்றால், ஆகஸ்ட் 16, 2020 வரை ரயில் டிக்கெட்களை பதிவு செய்ய, தேதிகளை தேர்வு செய்ய அனுமதிக்கிறது. ஆனால் ஏப்ரல் 14, 2020 முதல் 120 நாட்களை கணக்கிட்டால் ஆகஸ்ட் 12 வரை தான் வருகிறது.

எதுவரை ரத்து

எதுவரை ரத்து

இந்த இரண்டு தேதிகளிளும் முன் பதிவு செய்ய முயற்சித்தால், ஒரு சிவப்பு நிற அலர்ட் வந்து, முன் பதிவு ரத்து செய்யப்பட்டு இருப்பதாகச் சொல்கிறது. சுருக்கமாக, ரயில்வேஸில் இருந்து, அடுத்த அறிவிப்பு வரும் வரை ரயில் டிக்கெட் முன் பதிவு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railway booking suspended for all trains until further advice 39 lakh tickets cancelled

The Indian railway said in the IRCTC booking website that the Railway booking has been suspended for all trains until further advice. Around 39 lakh tickets has cancelled and refund works in process.
Story first published: Tuesday, April 14, 2020, 21:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X