டெல்லி: நாடு முழுவதும் 150 ரெயில்களை தனியாருக்கு விடுவதற்காக திட்ட வரைவு அறிக்கையை நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் 11 வழித்தடங்கள் உள்பட 100 வழித்தடங்களில் 150 தனியார் ரெயில்களை அடுத்த ஆண்டுக்குள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளததாகவும் கூறப்பட்டது.
இது சம்பந்தமாக நிதி ஆயோக் அறிக்கையில் தனியார் ரயில்களுக்கான தகுதி விவரங்கள், கட்டண நிர்ணயம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. சரி அப்படி என்ன தான் கண்டிசன்.. வாருங்கள் பார்க்கலாம்.
இவ்வளவு வேகத்தில் தான் போகணும்
தனியார் ரயில்கள் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கிக் கொள்ளலாம். அதிலும் குறிப்பிட்ட வழித்தடங்களில் அதே வழித்தடங்களில் செல்லும் ரயில்களை விட தனியார் ரயில்கள் 15 நிமிடங்களுக்கு முன்பு முன்னதாக புறப்பட்டு செல்ல வேண்டும். இதெல்லாவற்றையும் விட எந்த தனியார் ரயிலும் 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகக் கூடாது என்பது தான்.
குறைந்தப்பட்சம் எத்தனை பெட்டி
தனியார் ரயில்களில் குறைந்தபட்சம் 16 பெட்டிகள் இருக்கலாம், ஆனால் அதே நேரம் அதிகபட்சமாக அதே வழித்தடத்தில் செல்லும் நீண்ட தூர பயணிகள் ரயில்களில் உள்ள எண்ணிக்கையை விட அதிகமாகவும் இருக்ககூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் இந்த தனியார் ரயிலில் பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் குழுவினரும் இருப்பார்கள்.
பரமரிப்புக்கு இடம் ஒதுக்கீடு
தனியார் ரயில்களுக்கு ஏற்கனவே உள்ள யார்டு, பெட்டிகள் பராமரிப்பு செய்யும் பகுதிகளிலேயே தனியாக பராமரிப்புக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனம் சந்தை விலைக்கு ஏற்ப தங்களது கட்டணங்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனவும் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தனியார் ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு சலுகை வழங்கலாம்.
விளம்பரம் செய்து கொள்ளலாம்
இதெல்லாவற்றையும் விட தனியார் ரயில் நிறுவனங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப விளம்பரம் செய்து கொள்ளலமாம். அதாவது தங்களது ரயில்கள் கட்டண விவரங்களின் விளம்பரப்பலகைகளை பயணிகள் பார்க்கும் வகையில் முக்கிய இடங்களில் வைத்து கொள்ளலாமாம். அதோடு ரயில்களை குத்தகைக்கு எடுத்தும் இயக்கி கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரயில்களை இயக்க டிரைவர் பற்றாக்குறை ஏற்பட்டால், ரயில்வே துறையில் பணிபுரியும் டிரைவர்களையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications