இந்தியாவின் பெரும் பங்கு முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா உடல் நலக் கோளாறு காரணமாகக் கடந்த ஆறு மாதங்களாக மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் சுற்றி வந்து ஞாயிற்றுக்கிழமை மறைந்தார். இவரது மரணம் ராதாகிஷன் தமனி உட்படப் பல முன்னணி பங்கு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்நிலையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா கடைசியாக வாங்கிய நிறுவனப் பங்குகள் தற்போது பங்குச்சந்தையில் தாறுமாறான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா
சிங்கர் இந்தியா எனும் நிறுவனத்தில் மறைந்த இந்திய பங்குச்சந்தையின் BIG BULL என அழைக்கப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா-வின் சொந்த முதலீட்டு நிறுவனமான RARE எண்டர்பிரைசஸில் முதலீடு செய்து பெரிய அளவிலான பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
சிங்கர் இந்தியா
இந்தச் செய்தி வெளியானதில் இருந்து இந்தத் தையல் நிறுவன பங்குகள் செவ்வாய் அமர்வில் வலுவான உயர்வை பதிவு செய்து அளித்து 20 சதவீதம் மேல் உயர்ந்தது. இதே உயர்வு புதன்கிழமை வர்த்தகத்திலும் பதிவான நிலையில் சிங்கர் இந்தியா 2 நாளில் அதிகப்படியாக 50 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது.
50 சதவீதம் வரை வளர்ச்சி
சிங்கர் இந்தியா பங்குகளின் விலை புதன் வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 82.95 ரூபாய் வரையில் உயர்ந்து 2 நாளில் அதிகப்படியாக 50 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த இரண்டு வர்த்தக நாளில் சிங்கர் இந்தியா பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 56.40 ரூபாயில் இருந்து 82.95 ரூபாயாக உள்ளது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில் உள்ள தகவல்களின்படி, ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் முதலீட்டு நிறுவனமான RARE இன்வெஸ்ட்மென்ட்ஸ் சிங்கர் இந்தியாவின் பங்குகளை வாங்கியுள்ளது. ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மறைவுக்கு முன்பு வாங்கப்பட்ட நிறுவனம் என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.
10 சதவீத பங்குகள்
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா-வின் RARE இன்வெஸ்ட்மென்ட்ஸ் சுமார் 42,50,000 சிங்கர் இந்தியா பங்குகளை வாங்கியுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
RARE இன்வெஸ்ட்மென்ட்ஸ்
RARE இன்வெஸ்ட்மென்ட்ஸ் சிங்கர் இந்தியா பங்குகளைப் பல்க் டீல் மூலம் வாங்கியது. சிங்கர் இந்தியாவின் 42.50 லட்சம் பங்குகளைத் தலா 53.50 ரூபாய் செலுத்தி வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கர் இந்தியா வர்த்தகம்
சிங்கர் இந்தியா தையல் இயந்திரம் மற்றும் தையல் தொடர்பான பாகங்கள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. மின்விசிறிகள், அடுப்பு, ஏசி, ஜூஸ் மிக்சர் கிரைண்டர் போன்ற பிற வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்து வர்த்தகம் செய்யும் பிரிவிலும் இயங்கி வருகிறது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications