ஒரே மாதத்தில் ரூ.8300 கோடி கோவிந்தா.. முதல் காலாண்டிலேயே ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு அடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பங்கு சந்தை முதலீட்டாளர்களில் முன்னணியில் உள்ளவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. பங்கு சந்தை முதலீட்டில் இவரின் போர்ட்போலியோ பங்குகள் கவனிக்க வேண்டியவைகளில் ஒன்றாக உள்ளது.

 

குறிப்பாக ஆட்டோ மொபைல் துறை, பார்மா துறை, நிதித்துறை, கேமிங், மெட்டல் மற்றும் ஹோட்டல் என பல துறைகளிலும் முதலீடு செய்து வருகின்றார்.

எனினும் கடந்த நிதியாண்டின் 4ம் ஆண்டில் நல்ல லாபம் கண்டிருந்த நிலையில், முதல் காலாண்டில் பலத்த அடியினை கண்டுள்ளார்.

அந்த மனசுதான் சார் கடவுள்.. அமேசான் ரியல் ஹீரோவுக்கு குவியும் பாராட்டு மழை.. ஏன் தெரியுமா?

பெரும் இழப்பு

பெரும் இழப்பு

 

இந்திய சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பெரும் இழப்பினை கண்டுள்ளனர். குறிப்பாக சந்தையில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் போர்ட்போலியோவின் மதிப்பு 25% இழப்பினை கண்டுள்ளது.

டிரென்ட்லைன் தரவின் படி, ராகேஷ் ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில், 24.67% குறைந்து, 25,425.88 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.

போர்ட்போலியோவின் நிலை?

போர்ட்போலியோவின் நிலை?

ஜனவரி - மார்ச் 2022 காலாண்டு நிலவரப்படி, ராகேஷ் ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில் அவரின் போர்ட்போலியோ சொத்து மதிப்பு 33,753.92 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 8328.04 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளன.

முக்கிய பங்குகள்
 

முக்கிய பங்குகள்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்போலியோவில் 33 பங்குகள் உள்ளன. இதில் டைட்டன் பங்கும் மிக முக்கிய பங்காக உள்ளது. டைட்டன் பங்கின் மதிப்பு ஜூலை 1, 2022 நிலவரப்படி, 8728.9 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கிடையில் ஸ்டார் ஹெல்த் & அலைட் இன்சூரன்ஸ் அவரது பங்குகள் 4775.2 கோடி ரூபாயாகவும், அதனை தொடர்ந்து மெட்ரோ பிராண்ட்ஸ் மதிப்பு 2431.8 கோடி ரூபாயாகவும் இருந்தது.

போர்ட்போலியோ பங்குகள் சரிவு

போர்ட்போலியோ பங்குகள் சரிவு

இதே டாடா மோட்டார்ஸ் மதிப்பு 1619.8 கோடி ரூபாயாகவும், கிரிசில் மதிப்பு 1315 கோடி ரூபாயாகவும் உள்ளது. இவைகள் டாப் 5 பங்குகளாக உள்ளன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் டெல்டா கார்ப் மற்றும் டிவி 18 பிராட்காஸ்ட் பங்குகள் சுமார் 48% சரிவினைக் கண்டன. இந்தியா புல்ஸ் பங்கானது கிட்டதட்ட 45% சரிவினைக் கண்டது. இதே நால்கோ பங்கின் விலையானது கிட்டத்தட்ட 44% சரிவினைக் கண்டுள்ளது. இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் 44% சரிவினைக் கண்டுள்ளது.

எவ்வளவு சரிவு?

எவ்வளவு சரிவு?

ஆஃப்டெக், டிஸ்மேன், கார்போகன், ஸ்டார் ஹெல்த், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ், மேன் இன்ஃப்ரா, செயில் உள்ளிட்ட பங்குகள் 31 - 40% வரையில் சரிவினைக் கண்டன. இதே ராலிஸ் இந்தியா, வொக்கார்ட், டாடா கம்யூனிகேஷன்ஸ், ஓரியண்ட் சிமெண்ட், கனரா வங்கி, டைட்டன், நஷாரா டெக், ஜியோஜித் பைனான்ஷியல் சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் 21 - 30% சரிவினைக் கண்டுள்ளது.

இதெல்லாம் வீழ்ச்சி

இதெல்லாம் வீழ்ச்சி

வா டெக் வாபேக், பர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூசன்ஸ், ஆனந்த் ராஜ், லூபின், ஜீபிலியன் பார்மோவா, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், வி ஐ பி இண்டஸ்ட்ரீஸ், என்சிசி, எஸ்கார்ட்ஸ் குபோடா, பில்கேர், தி மந்தனா ரீடெயில், எடில் வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஜி எம் ஆர் இன்ஃப்ரா மற்றும் எம்சிஎக்ஸ் உள்ளிட்ட பங்குகள் 11 - 20% சரிவினைக் கண்டுள்ளன.

ஏற்றம் கண்ட பங்குகள்

ஏற்றம் கண்ட பங்குகள்

கரூர் வைஸ்யா வங்கி, டாடா மோட்டார்ஸ், ஃபெடரல் வங்கி, டார்க், இந்தியன் ஹோட்டல்ஸ், ஜூபிலண்ட் இங்க்ரீவியா, புரோசோன் இண்டூ போன்ற பங்குகள் 2-8% வரையில் சரிவினைக் கண்டுள்ளன. இதே அக்ரோ, டெக் ஃபுட்ஸ் மற்றும் கிரிசில் ஆகியவை காலாண்டில் சமமாக இருந்தன. இதில் ஆட்டோலைன் இன்ஸ்டஸ்ட்ரீஸ் அவரின் சொத்து மதிப்பு 7% சரிவினைக் கண்டது. இதே பிரகாஷ் பைப்ஸ் 4% மேலாகவும், அயர்ன் எக்ஸ்சேஞ்ச் கிட்டத்தட்ட 3%மும் மெட்ரோ பிராண்டுகள் 2.5%மும் ஏற்றம் கண்டன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rakesh jhunjhunwala's wealth wiped over Rs.8300 crore in june quarter

Rakesh jhunjhunwala's wealth wiped over Rs.8300 crore in june quarter/ஒரே மாதத்தில் ரூ.8300 கோடி கோவிந்தா.. முதல் காலாண்டிலேயே ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு அடி!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X