பல சர்ச்சைகளுக்குப் பின் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கட்டி முடிக்கச் சுமார் 1,100 கோடி ரூபாய்ச் செலவாகும் என ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த் க்ஷேத்திரம் அமைப்பின் பொருளாளர் நாக்பூரில் நடந்த செய்தியாளர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
கூடுதல் நிதி தேவைக்காக இந்தியா முழுவதும் இருக்கும் கிராமங்களில் நிதி திரட்டும் மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகவும் அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

ராமர் கோவில் பட்ஜெட்
ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த் க்ஷேத்திரம் அமைப்பின் பொருளாளரான கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் ராமர் கோவில் முழுமையாகக் கட்டி முடிக்க 1,100 கோடி ரூபாய் கட்டாயம் செலவாகும் என்றும், கட்டிட பணிகள் முழுமையாக நிறைவடைய 3.5 வருடம் ஆகும் எனத் தெரிவித்தார்.

மூலஸ்தானம் அடங்கிய அமைப்பு
இதேபோல் ராமர் கோவிலின் மூலஸ்தானம் அடங்கிய அமைப்பைக் கட்டி முடிக்க மட்டும் 300 முதல் 400 கோடி ரூபாய் அளவில் செலவாகும் என்றும், மொத்த கோவிலையும் கட்டி முடிக்க 1,100 கோடி ரூபாய்க்குக் குறையாமல் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் கிரிஜி மகாராஜ் தெரிவித்தார்.

ஐஐடி முதல் டாடா வரை
தற்போது கோவில் கட்டும் பணிகளுக்கான வரைப்படத்தை ஸ்டக்சரல் நிபுணர்கள் மற்றும் இன்ஜினியர்கள் வரைந்து வருவதாகத் தெரிவித்த அவர், ராமர் கோவில் கட்டுவதற்கு ஐஐடி பாம்பே, டெல்லி, மெட்ராஸ், கவ்ஹாத்தி, மத்திய கட்டிட
ஆய்வு அமைப்பு, எல் அண்ட் டி மற்றும் டாடா குழுமங்களில் இருக்கும் நிபுணர்கள் இணைந்து திட்டமிடப்பட்டு வருவதாகக் கிரிஜி மகாராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

100 கோடி ரூபாய்
ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த் க்ஷேத்திர டிர்ஸ்ட் அமைப்பு மத்திய அரசால் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு இதுவரையில் சுமார் 100 கோடி ரூபாய் அளவிலான ஆன்லைன் நன்கொடை வந்துள்ளது.
இந்நிலையில் கோவிலைக் கட்டி முடிக்கப் பெரிய அளவிலான நிதி திரட்டும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக இந்த அமைப்பு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

குஜராத்தில் நிதி திரட்டல்
இத்திட்டத்தின் படி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அயோத்தியில் கட்ட திட்டமிடப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு நிதி திரட்ட ஜனவரி 15 முதல் குஜராத் மாநிலத்தில் உள்ள 18,000 கிராமங்களுக்குச் செல்ல உள்ளனர் என்றும் கிரிஜி மகாராஜ் தெரிவித்தார்.

கர்நாடகாவில் நிதி திரட்டல்
இதேபோல் கர்நாடகாவில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 27 வரையில் நிதி திரட்டும் பணிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் 5 லட்சம் தன்னார்வலர்களுடன் இணைந்து நிதி திரட்டும் பணியில் இறங்க உள்ளனர்.

5.23 கிராமங்கள்
மேலும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் துணை பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் சுமார் 40 லட்ச தன்னார்வலர்களுடன் இணைந்து நாடு முழுவதும் இருக்கும் 5.23 கிராமங்களில் நிதி திரட்டும் திட்டத்தில் செயல்பட உள்ளதாகத் தெரிவித்தார்.