ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்துக்கொண்டு இருக்கும் யெஸ் வங்கி பிரச்சனை சாமானிய மக்களை மட்டும் அல்லாமல் பெரும் நிறுவனங்களையும், பெரும் பணக்காரர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோரின் கடன் மோசடி பிரச்சனை பெரியதாக வெடிக்கும் முன்னர் நாட்டை விட்டு ஓடியது போல் தற்போது யெஸ் வங்கியின் தலைவர் ரானா கபூர் மகள் ரோஷினி கபூர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சி செய்துள்ளார்.
ரோஷினி கபூர்-இன் இந்தச் செயல் மக்கள் மத்தியில் தீயாகப் பரவி வருகிறது.
லண்டனுக்குத் தப்பிக்க முயற்சி
யெஸ் வங்கியின் தலைவர் ரானா கபூர்-இன் மகள் ரோஷினி கபூர் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் வாயிலாக லண்டனுக்குச் செய்ய முயற்சி செய்துள்ளார். லண்டன் பயணத்திற்காக விமான நிலையம் வரும் போதும் சோதனையில் விமான நிலைய காவல் அதிகாரிகளால் ரோஷினி கபூர் லண்டன் செல்வதைத் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
அமலாக்கத் துறை
யெஸ் வங்கியின் கட்டுப்பாடு தற்போது முழுவதும் ரிசர்வ் வங்கியின் கீழ் இருக்கும் நிலையில் தற்போது பல்வேறு மோசடிகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதன் அடிப்படையில் தான் ரானா கபூர்-ஐ அதிகாலை 3 மணிக்கு டெல்லியில் அவரின் வீட்டில் வைத்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது.
நோட்டீஸ்
ரானா கபூர்-இன் கைதிற்குப் பின் முன்னெச்சரிக்கையாக அமலாக்கத் துறை யெஸ் வங்கி மோசடிகளில் அவரின் மகளுக்கும் தொடர்பு இருக்கும் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தான் ரோஷினி கபூர் லண்டன் செல்ல முயற்சி செய்த போது விமான நிலையம் காவல் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
20 போலி நிறுவனங்கள்
தற்போது கிடைத்துள்ள தவல்களின் படி யெஸ் வங்கி தலைவர் ரானா கபூர் மற்றும் அவரது குடும்பம் (மனைவி மற்றும் 3 மகள்கள்) சேர்ந்து சுமார் 20 போலி நிறுவனங்களை உருவாக்கி மிகப்பெரிய அளவிலான மோசடிகளைச் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
விசாரணை
மும்பை ஏர்போர்ட் காவல் அதிகாரிகள் அமலாக்கத் துறையிடம் ரோஷினி கபூர்-ஐ ஒப்படைத்த நிலையில் தற்போது விசாரணையில் ஈடுப்பட உள்ளார்.
யெஸ் வங்கி தலைவர் ரானா கபூர்-க்கு ராக்கி கபூர் டான்டன், ரோஷினி கபூர், ராதா கபூர் என 3 மகள்கள் உள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications