தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகஸ்ட் 16 அன்று தனது அலுவலகத்தில் மேலாளரான சாந்தனு நாயுடு-வால் நிறுவப்பட்ட மூத்த குடிமக்களுக்கான துணை தேடும் நிறுவனமான குட்ஃபெல்லோஸ் என்னும் நிறுவனம் அறிவிக்கப்படாத முதலீட்டைச் செய்துள்ளதாக அறிவித்தார்.
மக்களின் புதிய புதிய தேவைகள் தான் புதிய வர்த்தகமாகவும், சேவையாகவும் மாறுகிறது. அந்த வகையில் உலகளவில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பிரிவாக விளங்கும் மூத்த குடிமக்களுக்கான துணை அதாவது companionship - தோழமை உருவாக்கு சேவையைச் சாந்தனு நாயுடு குட்ஃபெல்லோஸ் என்னும் நிறுவனத்தின் வாயிலாக அளிக்கிறார்.
குட்ஃபெல்லோஸ்
குட்ஃபெல்லோஸ், மூத்த குடிமக்களுடன் இளம் பட்டதாரிகளுடன் ஒரு கட்டணச் சேவையின் வடிவத்தில் தோழமை உருவாக்கும் முயற்சியின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் புனேவில் பீட்டா கட்டத்தை நிறைவு செய்துள்ள இந்தக் குட்ஃபெல்லோஸ் நிறுவனம் இப்போது மும்பை, சென்னை மற்றும் பெங்களூருவில் சேவைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இரண்டு தலைமுறைகள்
குட்ஃபெலோஸ் உருவாக்கிய இரண்டு தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்புகள் மிகவும் அர்த்தமுள்ளவை மற்றும் இந்தியாவில் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைத் தீர்க்க உதவுகின்றன. குட்ஃபெல்லோஸ் இளம் குழுவின் வளர்ச்சிக்கு முதலீடு உதவும் என்று நான் நம்புகிறேன் என்று 84 வயதான ரத்தன் டாடா கூறியுள்ளார்.
ரத்தன் டாடா
வயதான காலத்தில் நீங்கள் தனியாக நேரத்தைச் செலவிடும் வரை தனிமையில் இருப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது, தோழமைக்கான தேவையும் உதவியும் எவ்வளவும் முக்கியம் என்பதை உணர்வீர்கள் என்று குட்ஃபெலோஸ் சேவை வெளியீட்டு விழாவில் 84 வயதான ரத்தன் டாடா தனது ஆதங்கத்தைக் கூறினார்.
தோழமை
ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்குத் தோழமை என்பது வேறுபட்ட அர்த்தத்தைக் கொண்டுள்ளது "சிலருக்கு ஒரு திரைப்படத்தைப் ஒன்றாகச் சேர்ந்து பார்ப்பது, கடந்த காலக் கதைகளை விவரிப்பது, ஒன்றாக நடப்பது அல்லது அமைதியாக நிறுவனத்தில் ஒன்றும் செய்யாமல் ஒன்றாக உட்கார்ந்து செல்வது போன்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கெல்லாம் இடமளிக்கும் சேவை தான் இந்தக் குட்ஃபெலோஸ் என்று 25 வயதான சாந்தனு நாயுடு கூறுகிறார்.
சாந்தனு நாயுடு
சாந்தனு நாயுடு என்பவர் ரத்தன் டாடா உடன் நீண்ட காலமாக அவருடன் இணைந்து பயணிப்பவர், டாடா சன்ஸ் சந்திரசேகரனைக் காட்டிலும் அதிகம் நேரம், அதிக நெருக்கமாக இருப்பவர் தான் 25 வயதான சாந்தனு நாயுடு.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications