போர்டு நிறுவனத்திற்கு ரத்தன் டாடா கொடுத்த Thug Life மொமென்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்குப் பின் டாடா குழுமம் என மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை.
டாடா குழுமம் சுமார் 10 துறையில் 100க்கும் அதிகமான பிராண்ட் மற்றும் நிறுவனங்கள் உடன் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது.

1864 முதல் டாடா குழுமம் இயங்கி வந்தாலும் ரத்தன் டாடா தலைமை பொறுப்புக்கு வந்த பின்பு தான், டாடா குழுமத்தின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

இப்படி ரத்தன் டாடா தலைமையில் டாடா குழுமத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவு எது தெரியுமா..?

வாரிசு கைகளுக்கு வருகிறதா டாடா குழுமம்.. ரத்தன் டாடா முடிவு என்ன..? வாரிசு கைகளுக்கு வருகிறதா டாடா குழுமம்.. ரத்தன் டாடா முடிவு என்ன..?

டாடா சன்ஸ் தலைவர்கள்

டாடா சன்ஸ் தலைவர்கள்

ரத்தன் டாடா 1961 முதல் டாடா ஸ்டீல் உட்படப் பல டாடா குழும நிறுவனத்தின் பணியாற்றி இருந்தாலும், JRD டாடாவுக்குப் பின்பு டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா நியமிக்கப்பட்ட பின்பு தான் டாடா குழுமத்தின் ராஜபோக வளர்ச்சி துவங்கியது.

டாடா சன்ஸ்-ன் தலைவர்கள் பட்டியல்

டாடா சன்ஸ்-ன் தலைவர்கள் பட்டியல்

  • ஜம்செட்ஜி டாடா (1868-1904)
  • சர் டோராப்ஜி டாடா (1904-1932)
  • நவ்ரோஜி சக்லத்வாலா (1932-1938)
  • ஜே. ஆர்.டி. டாடா (1938-1991)
  • ரத்தன் டாடா (1991-2012)
  • சைரஸ் மிஸ்ட்ரி (2012-2016)
  • ரத்தன் டாடா (2016-2017)
  • நடராஜன் சந்திரசேகரன் (2017-இன்று வரை)
டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

டாடா குழுமம் இந்தியாவில் கார் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியாமல் தவித்து வந்த நிலையில் மாருதி சுசூகி மற்றும் இதர பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையை ஆட்சி செய்து வந்தது.

 போர்டு நிறுவனம்

போர்டு நிறுவனம்

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்க முடியாது என்பதை உணர்ந்து இந்நிறுவனத்தை அமெரிக்காவின் போர்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யலாம் என ரத்தன் டாடா முடிவு செய்தார். இதற்காக ரத்தன் டாடா அமெரிக்கச் சென்று போர்டு நிறுவன தலைவரான பில் போர்டு உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உதாசீனம்

உதாசீனம்

இந்தப் பேச்சுவார்த்தையில் போர்டு தலைவர் பில் போர்டு, டாடா குழுமம் கார் உற்பத்தி துறைக்குள்ளேயே வந்திருக்கக் கூடாது என்று உதாசீனப்படுத்தினார். இதில் கடுப்பான ரத்தன் டாடா, டாடா மோட்டார்ஸ்-ஐ விற்பனை செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கினார்.

இண்டிகா கார்

இண்டிகா கார்

இதே போர்டு மோட்டார்ஸ்-ன் வர்த்தகம் குறைந்து ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை நிர்வாகம் செய்ய முடியாமல் தவித்து வந்த நிலையில் இதே ரத்தன் டாடா தலைமையிலான டாடா குழுமம் தான் போர்டு நிறுவனத்தைக் காப்பாற்றும் வகையில் 2008ஆம் ஆண்டு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வர்த்தகத்தை 2.3 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது.

வெற்றி தான் பழிவாங்குவதற்குச் சிறந்த கருவி

 

9 வருடம்

9 வருடம்

இதே போர்டு மோட்டார்ஸ்-ன் வர்த்தகம் குறைந்து ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை நிர்வாகம் செய்ய முடியாமல் தவித்து வந்த நிலையில் இதே ரத்தன் டாடா தலைமையிலான டாடா குழுமம் தான் போர்டு நிறுவனத்தைக் காப்பாற்றும் வகையில் 2008ஆம் ஆண்டு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வர்த்தகத்தை 2.3 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

2009 ஆம் ஆண்டில், நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய வகையில் வெறும் 1 லட்சம் ரூபாய்க்கு மலிவான காரைத் தயாரிப்பதாக ரத்தன் டாடா எவ்விதமான திட்டமும் இல்லாமல் அறிவித்த நிலையில் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் அதிர்ச்சி அடைந்தது. ஆனால் அதையும் சாதித்துக் காட்டினார் ரத்தன் டாடா.

டாடா நானோ கார்

டாடா நானோ கார்

டாடா நானோ கார்-ன் தரம் குறித்துப் பல கேள்விகள் இருந்தாலும், இது நடுத்தர மக்களுக்குச் சொந்த கார் என்ற கனவை நினைவாக்கியது மறுக்க முடியாது. டாடா நானோ கார்-ஐ வடிவமைப்பதில் ரத்தன் டாடா நேரடியாக இறங்கி பணியாற்றினார். இதன் மூலம் வெறும் 1 லட்சம் ரூபாய்க்கு டாடா நானோ கார்-ஐ அறிமுகம் செய்தார்.

 டாடா குழுமம் கைப்பற்றிய நிறுவனங்கள்

டாடா குழுமம் கைப்பற்றிய நிறுவனங்கள்

  • பிப்ரவரி 2000 - டெட்லி டீ நிறுவனம், $407 மில்லியன்
  • மார்ச் 2004 - டேவூ வர்த்தக வாகன நிறுவனம், $102 மில்லியன்
  • ஆகஸ்ட் 2004 - நாட்ஸ்டீலின் ஸ்டீல் வணிகம், $292 மில்லியன்
  • நவம்பர் 2004 - டைகோ குளோபல் நெட்வொர்க், $130 மில்லியன்
  • ஜூலை 2005 - டெலிகுளோப் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ், $239 மில்லியன்
  • அக்டோபர் 2005 - குட் எர்த் கார்ப்பரேஷன்
  • டிசம்பர் 2005 - மில்லினியம் ஸ்டீல், தாய்லாந்து, $165 மில்லியன்
  • டிசம்பர் 2005 - ப்ரன்னர் மோண்ட் கெமிக்கல்ஸ், $10 மில்லியன்
  • ஜூன் 2006 - யெய்ட் ஓ கிலாக் காபி, $220 மில்லியன்
  • நவம்பர் 2006 - ரிட்ஸ் கார்ல்டன் பாஸ்டன், $170 மில்லியன்
  • ஜனவரி 2007 - கோரஸ் குழுமம், $12 பில்லியன்
  • மார்ச் 2007 - PT கல்டிம் ப்ரிமா நிலக்கரி (KPC) (பூமி வளங்கள்), $1.1 பில்லியன்
  • ஏப்ரல் 2007 - கேம்ப்டன் பிளேஸ் ஹோட்டல், சான் பிரான்சிஸ்கோ, $60 மில்லியன்
  • ஜனவரி 2008 - இமாசிட் கெமிக்கல் கம்பெனி, மொராக்கோ
  • பிப்ரவரி 2008 - ஜெனரல் கெமிக்கல் இண்டஸ்ட்ரியல் ப்ராடெக்ட், $1 பில்லியன்
  • மார்ச் 2008 - ஜாகுவார் கார்கள் மற்றும் லேண்ட் ரோவர், $2.3 பில்லியன்
  • மார்ச் 2008 - Serviplem SA, ஸ்பெயின்
  • ஏப்ரல் 2008 - கொமோப்ளேசா லெப்ரெரோ எஸ்.ஏ., ஸ்பெயின்
  • மே 2008 - பியாஜியோ ஏரோ இண்டஸ்ட்ரீஸ் S.p.A., இத்தாலி - 2015 இல் விற்கப்பட்டது
  • ஜூன் 2008 - சைனா எண்டர்பிரைஸ் கம்யூனிகேஷன்ஸ், சீனா
  • அக்டோபர் 2008 - மில்ஜோ கிரென்லேண்ட் / இன்னோவாஸ்ஜோன், நார்வே
  • ஏப்ரல் 2010 - ஹெவிட் ராபின்ஸ் இன்டர்நேஷனல், யுனைடெட் கிங்டம்
  • ஜூலை 2013 - Alti SA, பிரான்ஸ்
  • டிசம்பர் 2014 - எனர்ஜி புராடக்ட்ஸ் லிமிடெட், இந்தியா
  • ஜூன் 2016 - Welspun புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இந்தியா
  • மே 2018 - பூஷன் ஸ்டீல் லிமிடெட், இந்தியா
  • அக்டோபர் 2021 - ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா SATS, $2.4 பில்லியன்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ratan Tata's Thug life moment for ford's jaguar land rover in 2008

Ratan Tata's Thug life moment for ford's jaguar land rover in 2008 போர்டு நிறுவனத்திற்கு ரத்தன் டாடா கொடுத்த Thug Life மொமென்ட்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X