சீனாவை விட்டு ஓடி வந்த ஆப்பிள்.. இந்தியாவுக்கு பம்பர் ஆஃபர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா - சீனா இடையில் வர்த்தகப் போர் ஏற்பட்ட நேரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவில் இருக்கும் அமெரிக்கா நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு மொத்தமாக வெளியேற நேரடியாக உத்தரவிட்டார்.

இதனால் சீனாவில் உற்பத்தி தளத்தை அமைத்திருந்த பல நிறுவனங்கள் தென் ஆசிய நாடுகளுக்குப் பறந்தது. குறிப்பாக டெக், கேஜெட் மற்றும் ஆட்டொமொபைல் நிறுவனங்கள் தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் இருந்து மொத்தமாக மாற்ற முடிவு செய்தது.

டொனால்ட் டிரம்ப் அறிவிப்பால் சீனாவில் இருந்து வெளியேறிய மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் சீனாவில் இருந்து சுமார் 9 ஸ்மார்ட்போன் தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது.

 இனி வீட்டுல பஜ்ஜி, போண்டா எல்லாம் கிடையாது.. சமையல் எண்ணெய் விலை 30% உயர்வு..! இனி வீட்டுல பஜ்ஜி, போண்டா எல்லாம் கிடையாது.. சமையல் எண்ணெய் விலை 30% உயர்வு..!

ரவி சங்கர் பிரசாத்

ரவி சங்கர் பிரசாத்

இணையவழியில் நடைப்பெற்ற 23வது பெங்களூரூ டெக் மாநாட்டில் பேசிய மத்திய ஐடி மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத், இந்தக் கொரோனா காலத்திலும் அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனமான ஆப்பிள் சுமார் 9 ஸ்மார்ட்போன் உற்பத்தி தளங்களைத் தனது உற்பத்தி நிறுவனங்களோடு சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றியுள்ளது எனக் கூறியுள்ளார்.

மாற்று இடம்

மாற்று இடம்

உலக நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் தங்களது உற்பத்தி பணிகளுக்குச் சீனா விட்டுவிட்டு மாற்று இடங்களைத் தேடி வரும் நிலையில், அனைத்து பிரிவுகளுக்கும் இந்தியா முதன்மை இடமாகத் திகழ்கிறது.

ஸ்மார்ட்போன், ஆயுதம், டெக், ஆட்டொமொபைல், டெக்ஸ்டைல் என அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது.

 

PLI திட்டம்

PLI திட்டம்

சீனாவில் இருந்து அதிகளவிலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்தும் வரும் நிலையில், உற்பத்தி உலகில் புதிய மற்றும் அதிகளவிலான நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே பிரத்தியேகமாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த production-linked incentive (PLI) திட்டம்.

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் ஆப்பிள் நிறுவனத்தோடு, சாம்சங், பாக்ஸ்கான், ரைசிங் ஸ்டார், விஸ்டிரான், பெகாட்ரான் போன்ற பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்க production-linked incentive (PLI) திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளது.

டெக்னாலஜியின் சக்தி

டெக்னாலஜியின் சக்தி

23வது பெங்களூரூ டெக் மாநாட்டின் துவக்கத்தில் பேசி பிரதமர் மோடி, இந்தக் கொரோனா காலத்தில் தொற்றுக் காரணமாக இந்திய மக்கள் வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் இந்திய டெக் துறை நிறுவனங்கள் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கியது எனப் பிரதமர் தெரிவித்தார்.

டெக் துறை

டெக் துறை

இந்தக் கொரோனா காலத்தில் பல டெக் நிறுவனங்கள் இந்தியாவிற்குத் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளதன் மூலம் டெக்னாலஜியின் சக்தியும் அதை இந்தியர்கள் சிறப்பாக ஆட்கொண்டது வெளிப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ravi Shankar Prasad said Nine Apple units shifted to India from China

Ravi Shankar Prasad said Nine Apple units shifted to India from China
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X