ரிசர்வ் வங்கியின் 3 முக்கிய அறிவிப்பு.. UPI சேவையில் புதிய புரட்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிசர்வ் வங்கி இன்று இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு ஏதுவாக ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், வங்கிகளுக்கான MSF விகிதம் 4.25 சதவீதமாகவும் தொடரும் என அறிவித்துள்ளது.

 

இதன் மூலம் 9 நாணய கொள்கை கூட்டங்களாக ஆர்பிஐ எவ்விதமான வட்டி விகித மாற்றமும் செய்யவில்லை.

இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் 3 முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை..!

 வங்கிகளுக்குத் தளர்வு

வங்கிகளுக்குத் தளர்வு

இந்தியாவில் இருக்கும் வங்கிகள் தங்களது வெளிநாட்டு வங்கி கிளையில் மூலதனத்தை முதலீடு செய்ய இனி ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை என அறிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ். இது தனியார் வங்கிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக இருக்கிறது குறிப்பாக ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ போன்ற முன்னணி வங்கிகள் வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும்

 யூபிஐ

யூபிஐ

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் யூபிஐ மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் இந்தச் சேவை தளத்தை விரிவாக்கம் செய்ய ரிசர்வ் வங்கி பியூச்சர் போன்களுக்கு யூபிஐ சேவையை அளிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்கும் 20 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை யூபிஐ தளத்திற்குள் இணைக்க முடியும்.

 கட்டணம்
 

கட்டணம்

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் மக்களுக்கு அடிப்படைத் தேவையாக மாற்றியுள்ள நிலையில், இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் சமீப காலமாக யூபிஐ சேவைக்கும் MDR கட்டணத்தைக் கொண்டு வர கோரிக்கை வைத்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி இந்தியாவில் இருக்கும் அனைத்து டிஜிட்டல் பேமெண்ட் குறித்து ஆய்வறிக்கை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

 மலிவான சேவை

மலிவான சேவை

மேலும் ரிசர்வ் வங்கி இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவைகள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்யும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டணத்தைக் குறைத்தால் பேடிஎம், போன்பே போன்ற நிறுவனங்கள் தனது வருமானம் கூடுதலாகப் பாதிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI 3 Important Announcements today: UPI-based payment products for feature phone users

RBI 3 Important Announcements today: UPI-based payment products for feature phone users ரிசர்வ் வங்கியின் 3 முக்கிய அறிவிப்பு.. UPI சேவையில் புதிய புரட்சி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X