RBI வாசலில் இருக்கும் பழக்கடைக்காரர்.. ஸ்பெஷல் டெஸ்டிங்.. என்ன நடக்கிறது..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் பல புதிய விஷயங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் வேளையில் சமீபத்தில் உலக நாடுகளை வியக்க வைக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி மிகவும் குறுகிய காலக்கட்டத்தில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து ரீடைல் மற்றும் ஹோல்சேல் சந்தையில் சோதனை செய்து வருகிறது.

இந்த சோதனையை மிகவும் குறுகிய வட்டத்தில் ஆர்பிஐ செய்து வரும் நிலையில், இந்த சோதனை குறித்து முழுமையான அறிவிப்புகளை வெளியிடாமல் உள்ளது. இந்த நிலையில் டிஜிட்டல் ரூபாய் எப்படி இருக்கும், அதை எப்படி மொபைல் போனில் பெறுவது என்பது போன்ற பல செய்திகளை குட்ரிட்டன்ஸ் தளத்தில் பார்த்துள்ளோம்.

இந்த நிலையில் இதை எங்கு பயன்படுத்துவது என்பதை மக்கள் யோசித்திக்கொண்டு இருக்கும் வேளையில் ஆர்பிஐ தனது ரீடைல் டிஜிட்டல் ரூபாய் சோதனையில் ஒரு பழக்கடைக்காரர்-ஐ சேர்த்துள்ளது.

 stocks to buy:எந்த பங்கினை வாங்கி போட்டால் லாபம் கிடைக்கும்.. எதெல்லாம் கொஞ்சம் பொறுத்து வாங்கலாம்! stocks to buy:எந்த பங்கினை வாங்கி போட்டால் லாபம் கிடைக்கும்.. எதெல்லாம் கொஞ்சம் பொறுத்து வாங்கலாம்!

பச்சே லால் சஹானி

பச்சே லால் சஹானி

பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் இருந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை வந்த பச்சே லால் சஹானி, தற்போது மும்பை மின்ட் சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் அருகே பழங்களை விற்பனை செய்யும் சாலையோர கடையை நடத்தி வருகிறார்.

போட்டோ: IE

ரீடைல் டிஜிட்டல் ரூபாய்

ரீடைல் டிஜிட்டல் ரூபாய்

நேற்று வரையில் பச்சே லால் சஹானி-யின் கதை யாருக்கும் தெரியாது, ஆனால் தற்போது ஆர்பிஐ தனது ரீடைல் டிஜிட்டல் ரூபாய் சோதனையில் இவரை சேர்த்தது மூலம் இந்தியா முழுவதும் டிரெண்டாகியுள்ளார்.

ரிசர்வ் வங்கி
 

ரிசர்வ் வங்கி

45 வயதான பச்சே லால் சஹானி தற்போது ரிசர்வ் வங்கியின் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) உருவாக்கிய டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்துவதற்கான நாடு தழுவிய சோதனை திட்டத்தில் ஒரு பகுதியாக இணைந்துள்ளார். இதன் மூலம் ஆர்பிஐ அடிமட்ட மக்கள் வரையில் டிஜிட்டல் ரூபாயை கொண்டு செல்ல முயற்சி செய்வது உறுதியாகியுள்ளது.

1 மாதம் 3 பரிவர்த்தனை

1 மாதம் 3 பரிவர்த்தனை

இந்த நிலையில் டிஜிட்டல் ரூபாயை குறித்து 45 வயதான பச்சே லால் சஹானி -யிடம் பேசுகையில், கிட்டத்தட்ட ஒரு மாதமாக டிஜிட்டல் ரூபாயை மக்களிடம் இருந்து பெற்று வருகிறேன், இதுவரையில் 2 அல்லது 3 பரிமாற்றங்கள் மூலம் 300 ரூபாய் வரையிலான தொகையை டிஜிட்டல் ரூபாயாக பெற்றுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி அதிகாரிகள்

ரிசர்வ் வங்கி அதிகாரிகள்

கடந்த மாதம் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அவரை அணுகி, டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைகளை ஏற்கும் படி அவரை ஒப்புக்கொள்ள வைத்துள்ளனர். பரிவர்த்தனைகளை செயல்படுத்த டிஜிட்டல் வாலட்டுடன் தனி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் அக்கவுண்ட்டைத் திறக்க ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பச்சே லால் சஹானிக்கு உதவியுள்ளனர். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், அவர் தனது போனில் அலர்ட் மெசேஜ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.

15,000 பேர்

15,000 பேர்

ரிசர்வ் வங்கி 2022 ஆம் ஆண்டு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பயன்படுத்தும் படி ரீடைல் டிஜிட்டல் ரூபாயை குறுகிய வட்டத்திற்குள் சோதனை செய்ய இத்திட்டத்தை அறிமுகம் செய்தது. நாடு முழுவதும் உள்ள சுமார் 15,000 வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களை உள்ளடக்கிய closed user group மத்தியில் ஆய்வு செய்கிறது ஆர்பிஐ.

 தெருவோர வியாபாரிகள்

தெருவோர வியாபாரிகள்

இந்த closed user group வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் குழுவில் மும்பையில் உள்ள ஒரு சில தெருவோர வியாபாரிகளில் 45 வயதான பச்சே லால் சஹானி-யும் ஒருவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI adds street fruit-seller Bachhe Lal Sahani in Digital rupee pilot project

RBI adds street fruit-seller Bachhe Lal Sahani in Digital rupee pilot project
Story first published: Wednesday, January 11, 2023, 18:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X