இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட்.. ஆர்பிஐ-யின் புதிய சேவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் மிகப்பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை, மத்திய அரசுக்குப் பல வழிகளில் இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவைகள் பலன் அளித்துள்ளது.

இந்தியாவின் பெரு நகரங்களில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் கிராமங்கள் மற்றும் டவுன் பகுதிகளில் இன்னும் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் மக்கள் பயன்படுத்தாத ஒன்றாகத் தான் உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

831% வளர்ச்சி.. இந்தியா, சீனா, ஐரோப்பாவில் கொடிகட்டி பறக்கும் ரியல்மி.. இது வேற லெவல்..! 831% வளர்ச்சி.. இந்தியா, சீனா, ஐரோப்பாவில் கொடிகட்டி பறக்கும் ரியல்மி.. இது வேற லெவல்..!

 டிஜிட்டல் பேமெண்ட்

டிஜிட்டல் பேமெண்ட்

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் ரிசர்வ் வங்கிக்கு UPI சேவை தளம் எந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியையும் பெருமையையும் கொடுத்ததோ அதைவிட மிகப்பெரிய தாக்கத்தை ரிசர்வ் வங்கி தற்போது அறிமுகப்படுத்த இருக்கும் ஆப்லைன் பேமெண்ட்ஸ் சேவை உருவாக்க உள்ளது.

 ஆப்லைன் பேமெண்ட்

ஆப்லைன் பேமெண்ட்

நீங்கள் நினைப்பது சரி தான் ஆப்லைன் பேமெண்ட் அதாவது இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் டிஜிட்டல் முறையில் பணத்தை அனுப்புவது அல்லது பேமென்ட் செய்யும் சேவைக்கான ப்ரேம்வொர்க்-ஐ இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

 ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள இப்புதிய ஆப்லைன் பேமெண்ட் ப்ரேம்வொர்க்-ல் அதிகப்படியாக ஒரு பேமெண்ட்-க்கு 200 ரூபாயும், மொத்தமாக 2000 ரூபாய் வரையிலும் பேமெண்ட் செய்ய முடியும்.

 இண்டர்நெட் - டெலிகாம் இணைப்பு வேண்டாம்

இண்டர்நெட் - டெலிகாம் இணைப்பு வேண்டாம்

இந்த ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கு எவ்விதமான இண்டர்நெட் மற்றும் டெலிகாம் இணைப்பும் தேவையில்லை. இதேபோல் இந்தப் பேமெண்ட் சேவையைக் கார்டு, வேலெட் அல்லது மொபைல் கருவிகள் மூலம் face-to-face (proximity mode) வாயிலாகச் செய்துகொள்ள முடியும்.

 SMS தாமதம்

SMS தாமதம்

மேலும் இந்த ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கு additional factor of authentication (AFA) தேவையில்லை அதாவது ஒடிபி போன்ற எதுவும் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆப்லைன் பேமெண்ட் என்பதால் பணம் செலுத்திவிட்டதற்கான SMS காலதாமதத்துடன் கிடைக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 வேலெட் சேவை

வேலெட் சேவை

இத்தகைய ஆப்லைன் பேமெண்ட் சேவையை Small Value Digital Payments என்ற வேலெட் வாயிலாகச் செய்ய ரிசர்வ் வங்கி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த வேலெட்-க்கு அதிகப்படியாக 2000 ரூபாய் மட்டுமே வைப்பு வைக்க முடியும். அதன் பின்பு மீண்டும் பணத்தை ஆன்லைன் வாயிலாகத் தான் லோடு செய்ய முடியும்.

 200 ரூபாய் மட்டுமே

200 ரூபாய் மட்டுமே

Small Value Digital Payments வேலெட் வாயிலாக ஒரு பேமெண்ட்-க்கு அதிகப்படியாக ஒரு முறை 200 ரூபாய் செலுத்த முடியும், அதற்கு மேல் செலுத்த முடியாது. இந்தத் திட்டத்தைச் சோதனை முறையாகச் செப்டம்பர் 2020 முதல் ஜூன் 2021 வரையில் பயன்படுத்தப்பட்டுப் பல்வேறு மாற்றங்களையும், மேம்பாடுகளையும் செய்யப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 கிராமம் மற்றும் டவுன் பகுதி

கிராமம் மற்றும் டவுன் பகுதி

இத்தகையை ஆப்லைன் பேமெண்ட் முறை இண்டர்நெட் இல்லாத, டெலிகாம் சேவை தரம் குறைவாக உள்ள அனைத்து இந்திய கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் இருக்கும் மக்கள் மத்தியில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை கொண்டு செல்ல சிறப்பான கருவியாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI allows offline digital payments: Big boon for rural and semi-urban area people

RBI allows offline digital payments: Big boon for rural and semi-urban area people இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட்.. ஆர்பிஐ-யின் சூப்பரான புதிய சேவை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X