பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் தேவையில்லை.. ஆனால் அரசிடம் உள்ள பங்குகளை குறைக்க முடியும்...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது. ஆனால் அதன் பங்குகளை இந்தியர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம், அரசின் பங்குகளை 26 சதவீதமாக குறைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கியின் வாரியத் தலைவர் சதீஷ் மராத்தே ஜூலை 25 அன்று தெரிவித்துள்ளார்.

 

வங்கி தேசியமயமாக்கலின் 51-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆன்லைன் கருத்தரங்கின் போது சதீஷ் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் பொது துறை வங்கிகளின் உரிமையானது பொதுமக்களிடம் இன்னும் பெரியளவில் செல்ல வேண்டும். அவர்கள் அரசாங்க பங்குதாரர்களாக இருக்க வேண்டும்.

மிகப்பெரிய இழப்பு

மிகப்பெரிய இழப்பு

கடந்த 51 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பை நீக்குவது ஒரு மிகப்பெரிய இழப்பு. உயர் நிர்வாகத்திற்கு பங்குகளை வழங்குவது சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சதீஷ் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளுக்கு மத்தியில், நமது நாடு ஏழை நாடாகவே உள்ளது. மேலும் நிதி அணுகலை அதிகமாக்க முயற்சிகளும் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியை சந்தித்துள்ளன என்றும் கூறியுள்ளார்.

மாற்றத்தின் அவசியம்

மாற்றத்தின் அவசியம்

மேலும் முறையான நிதி முறைமைக்கு 50 கோடி மக்கள் தொடர்ந்து elusive ஆக உள்ளனர். கடந்த 2004ம் ஆண்டின் ரிசர்வ் வங்கியின் முயற்சிகள் இருந்த போதிலும் ஒரு வங்கி அல்லது நுண் நிதி நிறுவனத்தால் கூட அவை தொடப்படவில்லை. நடைமுறைகளில் உள்ள மாற்றத்தின் அவசியம் குறித்தும் கூறியுள்ளார்.

கடன் பெறுவது எளிதில்லை
 

கடன் பெறுவது எளிதில்லை

உதாரணத்திற்கு தனது மகளையே கூறியுள்ளார். கடந்த பல மாதங்களாக வணிகத்திற்காக, அரசு வங்கியிடமிருந்து, 10 லட்சம் ரூபாய் கடன் வாங்க முயன்றும் பெற முடியவில்லை. சிறு வணிகப் பிரிவுடன், அரசு நடத்தும் வங்கிகளும் கிராமப்புறங்களுக்கான முழு அணுகு முறையையும் மாற்ற வேண்டும் என்றும் மராத்தே கூறியுள்ளார்.

அதிக வருமானம் ஈட்டுபவர்கள்

அதிக வருமானம் ஈட்டுபவர்கள்

நிதி ஆயோக் ஆய்வின் படி, கிராமப்புறங்களில் வருமானம் ஈட்டுபவர்களில் 65% அதிகமானோர் விவசாயம் அல்லாதவர்கள் தான். அவர்கள் சிறு வணிகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தான். இது பொதுத்துறை வங்கிகளால் சேவை செய்யப்பட வேண்டியது தான். அதோடு வேளாண் செயலாக்கத்தினையும் ஒரு புறம் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI board member said PSBs no need to privatise, but govt can reduce stakes to 26%

RBI board member said PSBs no need to privatise, but govt can reduce stakes to 26%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X