மும்பை CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது, இதன் மூலம் இவ்வங்கியின் அனைத்து விதமான வர்த்தகம் மற்றும் செயல்பாடுகளை ஏப்ரல் 30ஆம் தேதி முதல் முடக்கப்பட்டது.

 

மேலும் இக்கூட்டுறவு வங்கியில் டெப்பாசிட் செய்துள்ளோர்களுக்கு Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) விதிகளின் படி அதிகப்படியாக 5 லட்சம் ரூபாய் திருப்பிக் கொடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி இக்கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்தது தற்போது மக்கள் மத்தியில் பல்வேறு விதமான பயத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கியின் நிதி நிலைமை மிகவும் மேசமாகவும், நீண்ட நாள் செயல்படும் அளவிற்கு அடிப்படைத் தகுதிகள் கூட இல்லாத நிலையில் உள்ளது. மேலும் இவ்வங்கி நிர்வாகத்திடம் நிதி நெருக்கடியில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பதற்காகத் திட்டமும் இல்லை. இதேபோல் வேறு வங்கிகளுடன் இணைக்கும் முயற்சியிலும் இல்லை.

மேலும் CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கியின் நிர்வாக மேலாண்மையும் நம்பிக்கை கொடுக்கும் அளவிற்கு இல்லை என்று ரிசர்வ் வங்கி இவ்வங்கியின் அனைத்து விதமான செயல்பாடுகளை முடக்கி வங்கி இயங்குவதற்கான உரிமத்தையும் ரத்து செய்துள்ளது.

 

புனே

புனே

மகராஷ்டிர மாநிலத்தின் புனே, கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்யப்பட்டு மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி இயங்கி வந்தது. இவ்வங்கியின் உரிமத்தை தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், இனி இவ்வங்கி எவ்விதமான டெப்பாசிட் பெற முடியாது. இதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே பெறப்பட்ட வைப்பு நிதி அனைத்தும் உடனடியாகத் திருப்பித் தரப்பட வேண்டும்.

மேலும் இக்கூட்டுறவு வங்கியை அரசு விதிகளின் படி களைக்க ரிசர்வ் வங்கி ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

 

முக்கியப் பிரச்சனை
 

முக்கியப் பிரச்சனை

CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கியில் தற்போது போதுமான மூலதனம், மூலதன இருப்பு, வருமானம் ஈர்ப்பு, குறைந்தபட்ச மூலதன அளவீடான 9 சதவீத தொகை கூட இல்லமல்ல இருக்கிறது.

மேலும் இவ்வங்கியில் டெப்பாசிட் செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் காரணத்தால் தான் இவ்வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது என ரிசர்வ் வங்கி விளக்கம் கொடுத்துள்ளது.

CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி

CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி

1915ஆம் ஆண்டு துவங்கப்பட்ட CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி, மும்பை நகரின் பழமையான கூட்டுறவுகளில் ஒன்று. இவ்வங்கியின் தலைமை அலுவலகம் மாடுங்கா பகுதியிலும், மும்பை மற்றும் தானே பகுதிகளில் சுமார் 8 வங்கி கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

நவம்பர் 2019 நிலவரப்படி இவ்வங்கியில் சுமார் 485.56 கோடி ரூபாய் அளவிலான வைப்பு நிதி உள்ளது. மேலும் கடனாக 161.17 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கடனாகக் கொடுத்துள்ளது.

இன்றைய நிலையில் இவ்வங்கியின் மொத்த மதிப்பு -239.18 கோடி ரூபாய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI cancels licence of CKP Co-operative Bank

The Reserve Bank of India on Saturday cancelled the licence of CKP Co-operative Bank, with effect from the close of business on April 30, 2020. On liquidation, depositors are entitled to repayment of their deposits up to Rs 5 lakh only from the Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) as per usual terms and conditions, the RBI said in a press release.
Story first published: Sunday, May 3, 2020, 13:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X