ரிசர்வ் வங்கி-யின் கிளை அமைப்பான Central Bank Digital Currency (CBDC) அமைப்பு உருவாக்கிய ரீடைல் டிஜிட்டல் ரூபாயின் சோதனை டிசம்பர் 1 ஆம் தேதி செய்யப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதேபோல் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்குத் திக் திக் நேரம் துவங்கியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.டிஜிட்டல் ரூபாய் மூலம் பணச் சலவை, தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், வரி ஏய்ப்பு போன்ற அரசுக்குத் தலைவலி கொடுக்கும் அனைத்தையும் தீர்க்க முடியும்.
இந்த நிலையில் இந்த ரிசர்வ் வங்கி எவ்வளவு டிஜிட்டல் ரூபாய் உருவாக்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி-யின் கிளை அமைப்பான Central Bank Digital Currency (CBDC) அமைப்பு நவம்பர் 1 ஆம் தேதி ஹோல்சேல் டிஜிட்டல் ரூபாயை சோதனை செய்தது, டிசம்பர் 1 ஆம் தேதி ரீடைல் டிஜிட்டல் ரூபாயைச் சோதனை செய்தது.

1.71 கோடி ரூபாய்
இந்த நிலையில் ரீடைல் சந்தையில் பயன்படுத்தப்படும் ரீடைல் டிஜிட்டல் ரூபாய் சோதனைக்காகச் சுமார் 1.71 கோடி ரூபாய் மதிப்பிலான தொகைக்கு டிஜிட்டல் ரூபாய் உருவாக்கப்படும் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த அளவு வங்கிகளில் வைக்கும் டிமாண்ட் மூலம் தொடர்ந்து அதிகமாக உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 1
டிசம்பர் 1 ஆம் தேதி நடக்கும் ரீடைல் டிஜிட்டல் ரூபாய் சோதனை திட்டத்தில் குறிப்பிட்ட 4 நகரத்தில் மட்டும், வாடிக்கையாளர் - விற்பனையாளர்கள் அடங்கிய சிறிய வட்டத்திற்குள் ரீடைல் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்திச் சோதனை செய்யப்பட்டது.

50000 வாடிக்கையாளர்கள் - விற்பனையாளர்கள்
இந்தச் சோதனையில் சுமார் 50000 வாடிக்கையாளர்கள் - விற்பனையாளர்களை உட்படுத்த திட்டமிட்டு மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி ஆகிய 4 வங்கிகள் மத்தியில் பரிமாற்றம், வரவு கணக்குகளின் பதிவு ஆகியவை சோதனை செய்யப்பட்டது.

ரீடைல் டிஜிட்டல் ரூபாய்
இந்த ரீடைல் டிஜிட்டல் ரூபாய் வாயிலான பேமெண்ட்-ஐ தற்போது UPI சேவை போல் QR கோடு வாயிலாக எளிதாகச் செய்ய முடியும். உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரூபாய் வேலெட்-க்கு மாற்றுவதன் மூலம் நீங்கள் டிஜிட்டல் ரூபாயை பெற முடியும்.

2வது கட்ட சோதனை
2வது கட்ட ரீடைல் டிஜிட்டல் ரூபாய் சோதனையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி உடன் கூடுதலான பேங்க் ஆஃ பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகிய 4 வங்கிகளுடன் சேர்ந்து அகமதாபாத், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட உள்ளது.

டிஜிட்டல் வேலெட்
மக்கள் இந்த டிஜிட்டல் ரூபாய் பரிமாற்ற சேவையை வழங்கும் வங்கிகள், இந்தப் பரிமாற்றத்திற்காகப் பிரத்தியேகமாக டிஜிட்டல் வேலெட் அளிக்கும், அதன் வாயிலாகச் டிஜிட்டல் ரூபாயை செலுத்தவும், பெறவும் முடியும். மேலும் இந்த ரீடைல் டிஜிட்டல் ரூபாய் வாயிலான பேமெண்ட்-ஐ தற்போது UPI சேவை போல் QR கோடு வாயிலாக எளிதாகச் செய்ய முடியும்.