ஆர்பிஐ துணை ஆளுநர் பதவிக்கு இத்தனை பேரா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த டிசம்பர் 2018-ல் ஆர்பிஐ ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், தன் பதவியை சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகச் சொல்லி பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து சுமார் 8 மாதங்களுக்குப் பின், ஆகஸ்ட் 2019-ல் ஆர்பிஐ வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவராகவும், பணக் கொள்கை துறையின் தலைவராகவும் பணியாற்றிக் கொண்டு இருந்த விரல் ஆச்சார்யா பதவி விலகினார். இப்போது இவருடைய காலிப் பணியிடத்தை நிரப்ப நேர்காணல்களை நடத்தி இருக்கிறது ஆர்பிஐ.

 
ஆர்பிஐ துணை ஆளுநர் பதவிக்கு இத்தனை பேரா..?

ஆர்பிஐ வங்கியின் நிதித்துறை ஒழுங்குமுறை மற்றும் நியமன குழு (Financial Sector Regulatory Appointment Search Committee) தான் அடுத்த துணை ஆளுநர் பதவிக்கு ஆட்களை நேர்காணல் செய்து இருக்கிறது. இந்த கமிட்டியில் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ், நிதித் துறைச் செயலர் போன்றவர்கள் இருக்கிறார்களாம்.

 

ஆர்பிஐயின் துணை ஆளுநர் பதவிக்கு, விண்ணப்பிக்காதவர்களைக் கூட, இந்த கமிட்டியால் பரிந்துரை செய்ய முடியும் என்பது கொஞ்சம் சுவாரஸ்யத் தகவல். என்ன தான் இந்த கமிட்டி துணை ஆளுநர் பதவிக்கான நேர்காணல்களை எடுத்தாலும், இறுதி முடிவை, இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பிரதமர் அலுவலகம் தான் தீர்மானிப்பார்களாம்.

ஆர்பிஐ வட்டாரத்தில் இருந்து வெளி வந்த செய்திகளில்

1. Chetan Ghate, professor at Indian Statistical Institute,
2. Arunish Chawla, joint secretary (department of expenditure),
3. Manoj Govil, principal finance secretary,
4. Kshatrapati Shivaji, executive director, ADB,
5. Sanjeev Sanyal, principal economic adviser,
6. T V Somanathan, additional chief secretary, Tamil Nadu,
7. Michael Patra, RBI executive director,
8. Prachi Mishra, economist at Goldman Sachs.

போன்றவர்களின் பெயர்கள் இருக்கிறதாம். இதில் சேத்தன் கதே மற்றும் மக்கேல் பத்ரா ஆகிய இருவருமே, ஏற்கனவே ஆர்பிஐ பணக் கொள்கை கமிட்டிக் கூட்டங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றில் குறைந்த வயதில் துணை ஆளுநராக பதவி வகித்தவர் நம் விரல் ஆச்சார்யா என்பதும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

rbi deputy governor replacement for Viral Acharya is in process

The interview for the rbi deputy governor conducted by the Financial Sector Regulatory Appointment Search Committee (FSRASC).The final take on the appointment made by the Prime Minister Office based on the above committee recommendation.
Story first published: Monday, November 11, 2019, 15:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X