ஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கொரோனா வைரஸ் பற்றிய கவலைகள் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அதனால் பெருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையும் ஒரு புறம் அதிகரித்து வருகிறது.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்தி காந்த தாஸ் கடந்த புதன்கிழமையன்று, கொடிய வைரஸால் இந்தியாவில் கொரோனாவால் தாக்கம் இருக்கும். ஆனால் அது பெரியளவில் இருக்காது என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இது சீனாவின் ஜிடிபியிலும், சர்வதேச வளர்ச்சியிலும் கொரோனா அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

வர்த்தகத் தடையும் மீறி பாகிஸ்தான் முடிவு.. கைகொடுக்குமா இந்தியா..?வர்த்தகத் தடையும் மீறி பாகிஸ்தான் முடிவு.. கைகொடுக்குமா இந்தியா..?

சில துறைகள் பாதிப்பு

சில துறைகள் பாதிப்பு

மேலும் சீனாவின் கொரோனா வைரஸால் இந்தியாவில் சில துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த பிரச்சனைகளை களைய மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக மருந்தியல் மற்றும் மின்னணு உற்பத்தித் துறைகள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

கவனிக்கப்பட வேண்டிய விஷயம்

கவனிக்கப்பட வேண்டிய விஷயம்

இது இந்தியாவாக இருந்தாலும் சரி, மற்ற நாடுகளாக இருந்தாலும் சரி, இது உன்னிப்பாக கண்கானிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனை. ஒவ்வொரு கொள்கை வகுப்பாளரும் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மேலும் உள்நாட்டு தொழிலில் கொரோனா வைரஸ் வெடிப்பின் தாக்கத்தை சமாளிப்பதற்காக, அரசாங்கம் விரைவில் நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு பின்னர், ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கண்கானிக்க வேண்டும்

கண்கானிக்க வேண்டும்

மேலும் 2003ம் ஆண்டில் சார்ஸ் வைரஸ் பாதிப்பினை விட, தற்போது வந்துள்ள கொரோனா வைரஸால் பாதிப்புகள் அதிகம் உள்ளது. ஆக இந்த கோவிட் -19 வைரஸால் சீனாவின் ஜிடிபி விகிதம் மிக பாதிக்கும். உலக வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ள சீனாவின் ஜிடிபி விகிதம் குறைவதால், சர்வதேச வளர்ச்சி விகிதமும் குறையும். ஆக உலகின் ஒவ்வொரு பெரிய பொருளாதார நாடும் இதனை கண்கானிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

முக்கியமான வர்த்தக பங்காளி

முக்கியமான வர்த்தக பங்காளி

சீனாவின் முக்கிய வர்த்தக நாடாக இந்தியாவும், அதே போல் இந்தியாவை பொறுத்த வரையில் சீனா ஒரு முக்கியமான வர்த்தக பங்காளியாகவும் உள்ளன. ஆக கொள்கை வகுப்பாளர்கள் இதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்றும் தாஸ் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்தான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

போதிய ஸ்டாக் உள்ளது

போதிய ஸ்டாக் உள்ளது

பெரும்பாலான மிகப்பெரிய பார்மா நிறுவனங்கள் மூன்று - நான்கு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வைத்திருகின்றனர். எனவே அவர்கள் இப்பிரச்சனையை சமாளிக்க முடியும். ஆக கொரோனாவால் பாதிப்பு அவ்வளவாக இல்லை என்றும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI governor shaktikanta das coronavirus to have limited impact on India

RBI governor sakthikanta das said corona virus will have a limited impact on india, but global GDP nad China economy definitely get affected to large size.
Story first published: Thursday, February 20, 2020, 14:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X