சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை.. அடுத்த நிதி நெருக்கடி இங்க தான்.. மக்களே உஷார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் எந்த நாடாக இருந்தாலும் சரி, பிரைவேட் கிரிப்டோகரன்சிகள் வளர அனுமதித்தால் அடுத்த நிதி நெருக்கடிக்குக் கட்டாயம் கிரிப்டோ சந்தை தான் வழிவகுக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாகத் தான் அவற்றைத் தடை செய்ய முடிவு செய்ததாகத் தனது நிலைப்பாட்டைச் சரி என்பதை வலியுறுத்தியுள்ளார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைவர்.

கிரிப்டோகரன்சிகள் பெரிய அபாயங்களைத் தன்னுள் கொண்டுள்ளன, இது நாட்டின் பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் சக்திகாந்த தாஸ் எச்சரித்துள்ளார்.

டீ வேணுமா.. கிரிப்டோகரன்சி கொடுங்க.. அசத்தும் பெங்களூரு டீ செல்லர்..! டீ வேணுமா.. கிரிப்டோகரன்சி கொடுங்க.. அசத்தும் பெங்களூரு டீ செல்லர்..!

அடுத்த நெருக்கடி எங்கே?

அடுத்த நெருக்கடி எங்கே?

உலகமே வரவிருக்கும் நிதி நெருக்கடி குறித்துக் கடந்த சில மாதங்களாக விவாதித்து வருகிறது. இதன் தாக்கம் 2023 வரையில் இருக்கும் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வது குறித்த தனது எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் உலகில் அடுத்த நிதி நெருக்கடியைத் தூண்டுவது கிரிப்டோகரன்சி தான் எச்சரித்துள்ளார்.

சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கிரிப்ரோகரன்சி வர்த்தகம், முதலீடு ஆகிய அனைத்தும் 100% ஊக அடிப்படையில் செய்யப்படுபவை. மேலும் இதைத் தடைசெய்யப்பட வேண்டும் என்ற கருத்தில் நான் இன்னும் உறுதியாக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த நிதி நெருக்கடி பிரைவேட் கிரிப்டோகரன்சிகளில் இருந்து வரும் நான் சொல்வதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏன் தடை செய்யப்பட வேண்டும்

ஏன் தடை செய்யப்பட வேண்டும்

பிரைவேட் கிரிப்டோகரன்சிகள் தற்போது இருக்கும் நிதி பரிமாற்ற சிஸ்டத்தைப் புறக்கணிக்க அல்லது சிஸ்டத்தை உடைக்க வேண்டும் என்ற கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது.

பிரைவேட் கிரிப்டோகரன்சிகள்

பிரைவேட் கிரிப்டோகரன்சிகள்

பிரைவேட் கிரிப்டோகரன்சிகளை உருவாக்குபவர்கள் உலக நாடுகளின் மத்திய வங்கியின் நாணயம், ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி உலகம் ஆகியவற்றை நம்புவதில்லை, அவர்களின் நோக்கம் சிஸ்டத்தைப் புறக்கணித்து வெற்றி பெறுவது மட்டும் தான் என வங்கி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது சக்திகாந்த தாஸ் கூறினார்.

FTX வீழ்ச்சி

FTX வீழ்ச்சி

FTX தளத்தில் வீழ்ச்சி மற்றும் இந்நிறுவனத்தில் நடந்த மோசடி வரவிருக்கும் நிதிய அச்சுறுத்தலின் சான்று எனப் பேசிய சக்திகாந்த தாஸ் FTX நவம்பர் மாதத்தில் திவாலாவதற்கு முன் 32 பில்லியன் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ் தளமாக இருந்தது எனத் தெரிவித்தார். இன்றைய மதிப்பீடு பார்த்தால் நம்மைப் பயமுறுத்துகிறது.

கிரிப்டோ சந்தை

கிரிப்டோ சந்தை

பிரைவேட் கிரிப்டோகரன்சிகளின் சந்தை மதிப்பீடு 190 பில்லியன் டாலரில் இருந்து 140 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. பிட்காயின் போன்ற முன்னணி கிரிப்டோ டோக்கன்களின் சந்தை மதிப்பு நவம்பர் 2021 இல் மோசமான சரிவைச் சந்தித்தது, இதனால் மூலம் 3 டிரில்லியன் டாலராக இருந்து 2 டிரில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.

தவறான நாணய மாடல்

தவறான நாணய மாடல்

பிரைவேட் கிரிப்டோகரன்சிகள் எந்தவிதமான அடிப்படை சொத்துக்களையும் கொண்டிருக்கவில்லை, அதேபோல் என்ன பொதுநல நோக்கத்திற்காகச் சேவை செய்கிறார்கள் என்பது பற்றி எந்த நம்பகமான ஆதாரங்களும் இல்லை, இப்படியிருக்கையில் இதில் ஊக அடிப்படையில் முதலீடு செய்து விலையை ஏற்றி இறக்கப்பட்டு வருகிறது. இதை வைத்து எப்படி அதிகாரப்பூர்வ நிதி பாற்ற சந்தைக்குள் இதைக் கொண்டு வர முடியும் எனச் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கிரிப்டோ கட்டுப்பாடு

இந்தியாவில் கிரிப்டோ கட்டுப்பாடு

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிரிப்டோகரன்சி நுழைந்ததில் இருந்து இதன் மீது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுகளின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. 2018ல் ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை விதித்தது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

2020 இல் உச்ச நீதிமன்றம் கிரிப்டோகரன்சி மீதான கட்டுப்பாடுகளை நீக்கிய காரணத்தால் இதில் அதிகப்படியான முதலீடுகள் செய்யப்பட்டு இச்சந்தை இந்தியாவில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

30% வரி

30% வரி

ஆனாலும் பிரைவேட் கிரிப்டோகரன்சிகள் வர்த்தகத்தின் மீதான லாபத்தின் மீது 30% வரியை மத்திய அரசு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது மூலம் அதன் வர்த்தக அளவையும் முதலீட்டையும் குறைக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI Governor Shaktikanta Das warns next financial crisis from private cryptocurrencies

RBI Governor Shaktikanta Das warns next financial crisis from private cryptocurrencies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X