பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மீது ரூ.6 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கிகளில் அடுத்தடுத்து நடந்து வரும் கடன் மோசடிகள் மூலம் ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகள் உடன் வங்கிகளின் கணக்குகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் விதிமுறைகள் மீறுதல் மற்றும் மோசடி ஆகியவற்றின் கீழ் தவறுகளைச் செய்துள்ள பேங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றின் மீது ரிசர்வ் வங்கி சுமார் 6 கோடி ரூபாய் அளவிலான அபராதத்தை விதித்துள்ளது.

30000 கோடி ரூபாய் ஊக்க திட்டத்தை அறிவித்த ரிசர்வ் வங்கி..! 30000 கோடி ரூபாய் ஊக்க திட்டத்தை அறிவித்த ரிசர்வ் வங்கி..!

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாங்க் ஆப் இந்தியா மீது 4 கோடி ரூபாய் அபராதமும், பஞ்சாப் நேஷனல் வங்கி மீது 2 கோடி ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பாங்க் ஆப் இந்தியா - BOI

பாங்க் ஆப் இந்தியா - BOI

பாங்க் ஆப் இந்தியாவின் மார்ச் 31, 2019ஆம் முடிவின் போது நிதி நிலை குறித்துச் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள nspection for Supervisory Evaluation (lSE) மற்றும் ஜனவரி 1, 2019ல் சமர்ப்பிக்கப்பட்ட Fraud Monitoring Report (FMR) அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ரிடர்வ் வங்கி ஆய்வு நடத்தியுள்ளது.

பாங்க் ஆப் இந்தியா செய்த தவறுகள்

பாங்க் ஆப் இந்தியா செய்த தவறுகள்

இந்த ஆய்வில் பணப் பரிமாற்ற லிமிட், DEA நிதியின் தாமதமான பணப் பரிமாற்றம், கடன் மோசடி குறித்துத் தாமதமாக ரிசர்வ் வங்கிக்குத் தகவல் அளித்தல், போலியான சொத்துக்களை விற்பனை செய்தல் எனப் பல குற்றங்களையும், விதிமீறல்களையும் பேங்க் ஆப் இந்தியா செய்துள்ளது.

இதன் வாயிலாகப் பேங்க் ஆப் இந்தியா மீது 4 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

 

பஞ்சாப் நேஷனல் வங்கி செய்த தவறுகள்

பஞ்சாப் நேஷனல் வங்கி செய்த தவறுகள்

இதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ISE 2018 மற்றும் ISE 2019 ஆகிய இரு அறிக்கையை ஆய்வு செய்த போது டன் மோசடி குறித்துத் தாமதமாக ரிசர்வ் வங்கிக்குத் தகவல் அளித்தல், ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களில் துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிடர்வ் வங்கி அபராதம்

ரிடர்வ் வங்கி அபராதம்

இந்த இரு வங்கிகளுக்கும் செய்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கக் கூடாது, ஆனால் ஒழுங்குமுறை இணக்கம் இல்லாதது, வாடிக்கையாளர்கள் உடன் செய்யப்பட்ட பணப் பரிமாற்றம் ஒப்பந்தம் மீறியது ஆகியவற்றுக்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI imposes penalty of Rs 6 crore on Bank of India, Punjab National Bank

The Reserve Bank of India (RBI) imposed Rs 4 crore and Rs 2 crore fine on Bank of India (BOI) and Punjab National Bank (PNB) respectively in two separate order.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X