2 கூட்டுறவு வங்கிகளுக்கு ரு.7 லட்சம் அபராதம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த RBI.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) இரண்டு கூட்டுறவு வங்கிகளுக்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

 

இதில் வியாசாயிக் சகாரி வங்கி மரியடிட் (Vyavasayik Sahakari Bank Maryadit) கூட்டுறவு வங்கி, கேஓய்சி (KYC) மற்றும் பிற விதிமுறைகளை மீறியதற்காக 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதே லாதூரில் உள்ள மஹாராஷ்டிரா நகரி சஹாகரி வங்கி மரியடிட் (maharashtra nagari sahakari bank maryadit) மீது 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம்

கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம்

இது குறித்து ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் ராய்ப்பூரில் உள்ள வியாசாயிக் சஹாகரி வங்கி மரியடிட் மீது, கே ஒய் சி பிரச்சனை காரணமாக 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு கூட்டுறவு வங்கிக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை

ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை

எனினும் இது குறித்தான விரிவான அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் கடன் செயலிகள் (லோன் ஆப்) விவகாரம் பற்றிய எச்சரிக்கை விடுத்தது. இந்த லோன் ஆப் மூலம் கடன் வழங்கும் நபர்கள், அதிக வட்டி, பிராசஸிங் கட்டணங்கள், ஜிஎஸ்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் கடுமையான அபராதம் விதித்து வாடிக்கையாளர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்துகின்றனர். எனவே, இதுபோன்ற ஆப்களிடமிருந்து விலகியிருக்கும்படி ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது.

புகார் அளிக்கலாம்
 

புகார் அளிக்கலாம்

அதேசமயம் ஆன்லைன் கடன் மோசடி தொடர்பான வழக்குகளில் சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் தைரியமாக முன்வந்து https://sachet.rbi.org.in என்ற தளத்தில் புகார் அளிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருங்கள்

வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருங்கள்

தெலுங்கானாவில் ஆன்லைன் கடன் செயலி மோசடி தொடர்பாக சீன நாட்டவர் உட்பட நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். நகரத்தில் உள்ள கால் சென்டரான குபேவோ டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை நடத்திய பின்னர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆக வாடிக்கையாளர்கள் கே ஓய் சி அப்டேஷன் உள்ளிட்ட பலவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அதன் மூலம் தவறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI imposes Rs.7 lakh penalty on 2 cooperative banks

RBI updates.. RBI imposes Rs.7 lakh penalty on 2 cooperative banks
Story first published: Tuesday, January 5, 2021, 17:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X