மீண்டும் வட்டி குறைப்பு இருக்கலாம்.. பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸினால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தினை தூக்கி நிறுத்த, ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டத்தில், வட்டி குறைப்பு செய்யப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

பொருளாதாரத்தினை புதுபிக்க வேண்டிய அவசியத்தினால், வரும் ஆகஸ்ட் மாதத்தில் வரவிருக்கும் கூட்டத்தில், ரெபோ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் ஆளூனர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான கூட்டம், அடுத்து வரும் ஆகஸ்ட் 4 முதல் ஆக்ஸ்ட் 6ம் தேதி வரையிலான மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஆக இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 மீண்டும் வட்டி குறைப்பு இருக்கலாம்.. பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுக்கலாம்..!

கொரோனாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ரிசர்வ் வங்கி பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நடக்கவிருக்கும் இந்த கூட்டத்திலும் மேற்கொண்டு எந்த மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும் என்றும் எண்ணப்படுகிறது. ஏனெனில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் பொருளாதாரம் பற்றிய பார்வை மிக மோசமாக இருந்து வருகிறது.

ஆக இதற்கு முன்பு மார்ச் மற்றும் மே மாதத்தில் நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்திலேயே 115 அடிப்படை புள்ளிகள் ரெபோ விகிதம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் எவ்வளவு குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில் மற்றொரு அறிக்கையில் நிபுணர்கள் ரெபோ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளையும், தலைகீழ் ரெபோ விகிதத்தில் 35 அடிப்படை புள்ளிகளையும் குறைக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று இக்ராவின் முதன்மை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் பிசினஸ் ஸ்டேண்டர்டு செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மட்டும் அல்ல, இதே போன்ற கருத்துக்களையே யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜ்கிரான் ராயும் தெரிவித்துள்ளார். ரெபோ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

தொழில்துறை அமைப்பான அசோசெம் தொழில் துறை எதிர்கொள்ளும் சிக்கல்களை கருத்தில் கொண்டு, கடன் மறுசீரமைப்பில் ரிசர்வ் வங்கி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் கடனை மறுசீரமைப்பது பணவியல் கொள்கை குழுவின் முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அசோசெம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI may for further rate cut for next policy meeting, says expert

RBI policy meeting expectations... RBI may for further rate cut for next policy meeting, says experts
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X